உறவுகள் – உணர்வுகள் – மாயை Relativity of Relationship
நம்மைச் சுற்றியுள்ள நபர்களுக்கும் நமக்கும் உள்ள உறவானது, ஒரு கலீடியோஸ்கோப் போல ஒவ்வொரு கனமும் ஒவ்வொரு விதமாக பலவண்ணக் கலவையாக உருமாறிக்கொண்டே இருக்கக்கூடியது. உறவுகளில் ஏற்படும் சிக்கல்கள், தவறான புரிதல், குளறுபடிகளை சரியாகப் புரிந்துகொண்டு முறையாகக் கையாள நமக்கு போதுமான அறிவுறுத்தல்கள் இல்லை என்றே நினைக்கிறேன். நான் எனது புரிதல்களில் இருந்து எந்த ஒரு உறவைவும் எப்படி மிகைப்படுத்தாமல் மட்டுப்படுத்தாமல் அதையதை அதனதன் அளவுகளில் உள்வாங்கிக்கொள்வது என்று வகைமைப்படுத்த முயற்சிக்கிறேன்.