பாலியல் தொழிலும் ஒரு தொழில்தான் – உச்சநீதிமன்றம்

பாலியல் தொழில் குற்றமல்ல என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சட்டம் அனுமதிக்கும் எல்லாமும் சரியும் அல்ல, சட்டம் தடைவிதித்த அனைத்தும் தீங்கும் அல்ல. குறிப்பாக பாலியல் தொழில் ஒரு குற்றமல்ல என்று கருதியிருக்கும் உச்ச நீதிமன்றம், இதில் உள்ள அனைத்து விளைவுகளையும் எண்ணி தொலைநோக்கு பார்வையுடன்தான் இந்த தீர்ப்பை வழங்கியிருக்க வேண்டும். இதன் ஒரு முனையை தொட்டால் இன்னும் பல பிரச்சனைகளும் இதில் சம்மந்தப்படும். இது ஒரு தனி பிரச்சனை அல்ல. பாலியல் தொழில் என்பது ஒரு சமூகம் நேர்த்தியாக செயல்பட முடியாமல் தோற்றுப்போனதற்கான முத்திரையாகவே நாம் புரிந்து கொள்ள வேண்டும். பாலியல் தொழில் சரியா தவறா தேவையா தேவையில்லையா என்ற முடிவுக்கு வரவேண்டுமென்றால் முதலில் வருங்கால சமுதாயத்தை நிரப்பவிருக்கும் மாணவர்களிடம் இருந்துதான் வரவேண்டும்.

வரும் தலைமுறையினரின் கல்வி:

ஏற்கனவே அரசு இயற்றியுள்ள புதிய கல்விக்கொள்கையினால் எத்தனை மாணவர்கள் மேற்படிப்புகளுக்கு செல்லப்போகிறார்கள் என்ற அய்யம் எனக்குண்டு. தொழில் முனைவோர்கள் நமது சமுதாயத்திற்கு வேண்டும்தான். ஆனால், கல்லூரி படிப்பினை முடிக்காமல் ஆரம்பிக்கும் ஒரு தொழிலை அவர்களால் எந்த உயரத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்று எண்ணிப்பாருங்கள். ஓயோ (oyo) நிறுவனர் போன்று உதாரணங்களை நம்மிடம் தூக்கிக்கொண்டு வந்து நிற்பார்கள். நம்பாதீர்கள். இந்த நூற்றாண்டில் மொத்தமே சில ஆயிரம் நிறுவனர்கள்தான் அப்படி கல்லூரி படிப்பை முடிக்காமல் மல்டி மில்லியனர் ஆக முடியும். பெரும்பாலான மாணவர்களுக்கு அது சாத்தியம் இல்லை.

இந்த புதிய கல்விக்கொள்கை நிறைய கூலிக்காரர்களையும் ஒப்பந்தத் தொழிலாலர்களையும் ‘non skilled’ லேபர்ஸ் என்று சொல்லப்படும் தினக்கூலிகளையும்தான் உருவாக்கும். பிறகு அவர்களது தகுதி அதுதான் என்று நமக்கே புத்தி போதிக்கும். ஜாதிக்கொரு வேலை என்றாக்கி குடும்பத்தொழிலையே மகனும் மகளும் ஏற்றுக்கொள்ளும் நிலை வரும்.

கல்வி என்பது ஒருவனது தகுதியை மேம்படுத்ததானே தவிற, ஏற்கனவே ஒருவனது தகுதி இதுதான், ஒரு படிப்பினை படிக்கும் அளவிற்கு ஒருவன் தகுதியில்லாதவன் என்பது எத்தகைய கயமம் என்று எண்ணிப்பாருங்கள். டாக்டர் ஆவதற்கு ஒருவனுக்கு என்ன தகுதி வேண்டும் என்பது அதற்கான புத்தகங்களைப் படித்துப்பார்த்தப் பிறகுதான் அவனுக்கு பரிட்சை வைக்க வேண்டும். நீட் போன்ற தகுதித்தேர்வுகள் சற்றும் அறமற்றது.

மாணவர்கள் குடும்ப சூழல் காரணமாக வேலைக்கு செல்வது ஒரு கொடுமை என்றால், (அரசாங்கம் என்பது இந்த இடத்தில்தான் மாணவர்களுக்கு கை கொடுக்க வேண்டும். ஆனால்?) படிப்பதற்கு வழி இல்லை, சட்டம் இல்லை, வாய்ப்பு இல்லை, இடம் இல்லை என்பதற்காக வேலைக்கு போவது கொடுமையிலும் கொடுமை.

இப்படி பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கான கதவுகளை அரசாங்கம் ஒவ்வொன்றாக மூட, மாணவர்களும் வேறு ஒரு பக்கம் திசை திருப்பப்படுகின்றனர்.

புடிச்சத பண்ணுஎனும் மாய மந்திரம்:

கடந்த இருபது ஆண்டுகளில் மாணவர்களின் காதுகளில் தேனாக வந்து விழும் வார்த்தை “புடிச்சத பண்ணு”.

எனக்கு இதில் வியப்பு என்னவென்றால் எல்லாருக்கும், சினிமா சம்மந்தப்பட்ட வேலைதான் பேசனாக புடிச்சதாக இருக்கிறது.

முதல் தேர்வாக போட்டோகிராப்பர், டைரெக்டர், ஆக்டர், யுடியூபர்.

இரண்டாம் தேர்வாக பாடகர், பாடலாசிரியர், கேமராமேன், எடிட்டர்.

ஒரு வித்தியாசத்தை மாணவர்கள் நன்கு உள்வாங்கிக் கொள்ள வேண்டும். I like one thing. I’m good at one thing. இரண்டும் ஒன்றாக இருக்கவேண்டிய கட்டாயம் ஏதும் இல்லை.

Self assessment test நிறைய மேற்கொள்ளுங்கள்.

கண்டிப்பாக உங்களுக்குள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட திறமைகள் ஒளிந்திருக்கக்கூடும், அதை தேடிக் கண்டு பிடியுங்கள். ஆனால், அதற்கான விலையாக உங்களது பட்டப்படிப்பை கொடுக்காதீற்கள். ஒரு வேளை உங்களுக்கு எந்த வாய்ப்பும் கிடைக்காமல் போய்விட்டால், நீங்க படித்த படிப்புதான் உங்களுக்கு கை கொடுக்கும்.

உங்களைப் பரவசமூட்டும் வேலைகளை கையில் எடுத்துக்கொண்டு இதுதான் என் திறமை என்று உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளாதீர்கள்.

Humans can be easily manipulated thru movies.

Movie dialogues are not true. They are fantasy.

படிப்பது கடினம்தான். அதுவும் கவனமாகப் படிப்பது மிகக்கடினம்தான். அதற்காகத்தான் டாக்டர்கள் அதிகக்கட்டனத்தை வசூலிக்கிறார்கள். மருத்துவச்செலவை சற்று கவனியுங்கள். அவர்கள் கஷ்டப்பட்டு படித்ததற்கு சன்மானம் நாம்தான் வழங்கிக்கொண்டிருக்கிறோம்.

வேலை என்பது சற்றும் ரசமில்லாத, அலுப்பான, கடியான, தலைவலியான, வெறியேற்றக்கூடிய, எத்தகைய வேலையாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதை செய்வதன் மூலமாகத்தான் எனது குடும்ப சந்திக்கும் சிரமங்கள் குறையும் என்றால் நான் தாரளமாக அந்த வேலையை செய்வேன். ஆனால் அதில் அறம் இருத்தல் வேண்டும். காசுக்காக எதை வேண்டுமானலும் செய்யலாம் என்று போனால், ஜங்கில் ரம்மி, ரம்மி சர்கிள், போன்ற சூதாட்டத்தில்தான் நிற்போம். சூதாட்டத்தில் ஒருவனுக்கு மட்டுமே வெற்றி அவன் அந்த சூதாட்டத்தை நடத்துபவனே. சில கிரிக்கெட் மொபைல் ஆப்களும் இதே ரகத்தில் இருப்பதாக அறிகிறேன். 11team என்பது போன்ற பெயரில். இன்னும் டிரேடிங், போன்ற ஆப்கள் மூலம் சம்பாரிப்பதையும் நான் காண்கிறேன். இதுவும் நிலையற்ற அறமற்ற வருமானம்தான்.

என்ன வேலை செய்வது?

வேலை என்பது இரண்டு வகைதான். சேவை மற்றும் உற்பத்தி. Service and Product.

நீங்கள் செய்வது சேவையாக இருத்தல் வேண்டும். அல்லது ஒரு பொருளை நீங்கள் உற்பத்தி செய்தல் வேண்டும். இது இரண்டும் இல்லாத எதுவும் திருத்தமான சம்பாத்தியத்தில் வராது. நல்ல சேவை வழங்கி அதன் மூலம் வரும் வருமானத்தில் வாழலாம். நல்ல தரமான பொருட்களை உருவாக்கி அதன் மூலமாக வரும் வருமானத்தில் வாழலாம். இவ்விரண்டில் நீங்கள் தொழிலாளியோ முதலாளியோ எதுவாக இருந்தாலும் உங்களுக்கு அது திருப்தியாக இருக்கும்.

மாணவர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் கொண்டாடப்பட வேண்டும் என்று நினைக்கிறார்களா என்று தெரியவில்லை. பிரபலமாக இருந்தால்தான் வாழ்வில் வெற்றிபெற்றவராக ஒருவர் மதிக்கப்படுவர் என்ற எண்ணம் வேறூன்றி இருப்பதாக நினைக்கிறேன். அதன் காரணமாகவே மக்கள் கொண்டாடும் சினிமாத்துறையையே தங்களது தனித்திறன் என்று போலியாகவோ மாயையிலோ நம்பிக்கொண்டிருக்கிறார்கள். உங்களை கொண்டாட வேண்டியது நீங்கள்தான். வேறு யாரும் இல்லை. உங்கள் குடும்பம், நண்பர்கள், சொந்தங்கள் உங்களைக் கொண்டடினால் போதும். செலபிரிட்டியாக ஆகி மக்கள் உங்களிடம் வந்து செல்பி எடுக்க ஆசைப்படும் அளவிற்கு வளர்ந்தால்தான் வெற்றியாளர் என்ற எந்த நிற்பந்தமும் இங்கு இல்லை. fame light விழும் இடத்தை தேடிச்செல்லாதீர்கள். நீங்கள் செய்யும் வேலை நன்கு செய்தால், fame light உங்களைத்தேடி வரும்.

இதற்கும் செக்ஸ் வொர்க்குக்கும் என்ன சம்மந்தம் என்று இன்னேரம் நீங்கள் எண்ணி இருக்கலாம்.

பொருளாதாரம் முக்கியம் தம்பி:

ஒரு குடும்பம் என்பது நிலையான வருமானம் இருந்தால் சீராக வளரும். நிலையான வருமானம் இல்லையென்றால் குடும்பத்தில் நிறைய குழப்பங்கள் வரும். பொருளாதார நெருக்கடியினால் தூக்கில் தொங்கிய குடும்பங்களின் எண்ணிக்கை அரசாங்கத்திடம் கூட இருக்காது. குடும்பத்துடன் தீயிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட நிகழ்வு இன்னும் நமது மனதில் இருந்து நீங்கி இருக்காது என்றே நம்புகிறேன்.

ஆணோ பெண்ணோ குடும்பத்தை பார்த்துக்கொள்ள நிலையான வருமானம் இருவருக்கும் இல்லை எனக்கொள்க, குழந்தைய வளர்க்க செக்ஸ் ஒர்க் ஒரு லாவகமான வழி என்ற சூழல் மிக சாதாரனமாக உருவாகிக்கொண்டிருக்கிறது. இதில் அந்த பெண்ணுக்கும் எந்த பாதுகாப்பும் இருக்காது. அந்த பெண்ணுடன் இருக்கும் குழந்தைக்கும் எந்த பாதுகாப்பும் இருக்காது.

பொது சேவைக்காக எந்தப் பெண்ணும் தனது உடலை தடிமாடுகளுக்கு வாடகைக்கு விடப்பொவது இல்லை. பணத்திற்காகத்தான், செக்ஸ் வொர்க் லீகல் என்று அறிவிற்க ஒரு நாடு வெக்கப்பட வேண்டும். அவர்களுக்கான குடும்பத்தை அவர்களால் நிலைநாட்டிக்கொள்ள முடியாத அளவிற்கு பொருளாதர சூழல், வேலை இன்மை இருந்தால் அதை சரி செய்ய வேண்டிய கடமை அரசினுடையது.

“பிழைக்க வழி இல்லை என்றால் உடலை விற்று பிழைத்துக்கொள் நாங்கள் யாரும் எதுவும் (தேவிடியா என்று) சொல்ல மாட்டோம். மரியாதையாக நடத்துவோம். பணம் கொடுத்து படுத்துவிட்டு செல்வோம்.” என்பதாகத்தான் என் காதுகளில் கேட்கிறது.

சுள்ளான் படத்தில் வரும் காட்சி

சுள்ளான் படத்தில் பஸ்ஸில் ஒரு ஆண் ஒரு பெண்ணை உரசிக்கொண்டே வருவான், அந்தப்பெண் பொறுமை இழந்து, வா கல்யாணம் பண்ணிக்கலாம் என்று சொன்னால், ஆண் ஜகா வாங்கி விடுவான்.

அப்படி ஒரு குடும்பத்தை மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் நிறைவாக கொண்டுசெல்லமுடியாத ஆண்கள் நிறைந்த காலகட்டம் வருவதற்குள், தன்னை உரசிப் பார்க்கும் ஆண்களிடம் பெண்களே வந்து “ஒரு நைட்டுக்கு ரெண்டாயிரம் ரூபாதான்” என்று சொல்லக்கூடிய காலகட்டம் வருவதற்கு எல்லா திசைகளிலும் வழிவகைகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

வாழ்வதற்கே வேறு வழியின்றி பாலியல் தொழிலை செய்யும் பெண்களுக்கு தற்காலிகமாக இந்த சட்டம் பாதுகாப்பளிக்கலாம். நீண்ட கால நோக்கத்தில் பார்க்கும் போது இது அடுத்த தலைமுறைக்கு தவறான அறமற்ற வாழ்க்கை முறைக்கு வாசலை திறந்து வைப்பதாகவே இருக்கிறது.

வரும் தலைமுறை மாணவர்களுக்கு தேவை தெளிந்த நல்லறிவு. திசை மாற்றி விட்டால், வட மாநிலங்களைப் போன்ற முட்டாள் ரவுடிக்கூட்டம் நிறைந்த மாநிலமாக தமிழ்நாடு மாறுவது நிச்சயம்.

குடும்பம் என்ற கட்டமைப்பு கனிசமாகக் குறைய, நிலையான வருமானம், இல்லறம் பற்றின அறிவு, இரண்டும் இல்லாத ஆணும், பெண்ணும் போதும்.

பெண்களில் பலர் வேசிகளாவர். ஆண்களில் பலர் கூலிகளாவர். இதை சரி செய்யக்கூடிய இடத்தில் இருப்பது பெற்றோர்களும், அரசும்தான். அபாயகரமான ஒரு எதிர்காலம் இருக்கிறது. விதி அந்தப்பக்கம் செல்லாமல் நல்வழிப்படுத்த போராடுவோம். உழைப்போம் உயர்வோம், அறத்துடன் வாழ்வோம்.

-சூர்யதேவன். 8.50 pm 27-05-2022

Leave a Comment