சிறுகதை: Rhythm of Souls

1

சென்னையின் வசதியான பார் ஒன்றில் இரவு பத்து மணியளவில் மூலையில் மங்கலான வெளிச்சத்தில் இருவர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவன் முப்பது வயதுடையவன். முகத்தில் ஒரு பெரும் நம்பிக்கையும், தெளிவும் கொண்டவனாய் கையில் ஒரு ஹெட்போனுடன் உட்கார்ந்து இருக்கிறான். தனக்கென வைத்த கொக்ககோலாவையும் அவன் இன்னும் எடுத்துக் குடிக்கவில்லை. இன்னொருவர், நாற்பதைக் கடந்தவர். அலட்சியமான முக பாவனையுடன் பியரை குடிப்பதிலும் சிப்ஸை கடிப்பதிலுமே நாட்டமாய் இருக்கிறார்.

அவர் முகம் குடுக்காவிட்டாலும், இவன், “இல்ல சார் இந்த பாட்டு கண்டிப்பா படத்துல இருக்கனும், இதுதான் இந்த படத்தோட உயிரே. மத்த ரெண்டு பாட்ட கூட எடுத்தறலாம் ஆனா இது கண்டிப்பா வேணும் சார்” என்று பணிவான குரலில் வேண்டி முடிக்கிறான்.

அவர் பியரை குடித்துவிட்டு, “யேம்பா, இதெல்லாம் ஒரு பாட்டா ? காக்கா குருவி கத்றதெல்லாம் ரெக்கார்ட் பண்ணி டியுன் போட்டுகிட்டு, பாட்டுனா நல்லா ஜாலியா கலர்ஃபுல்லா இருக்க வேணாமா ? இதுல லிரிக்சும் இல்ல, இன்ஸ்ட்ருமெண்டும் இல்ல, இதையெல்லாம் யாரு கேப்பா சொல்லு ?” என்று கணத்த குரலில் பிடிவாதமாக இவனது கோரிக்கையை நிராகரிக்கிறார்.

அவர் மீண்டும் பியரிடம் தன் கவனத்தை செலுத்திய பின்பும் இவன், “ புரியுது சார், ஒரு ப்ரொடியூசரா நீங்க படத்துக்கு இந்த பாட்டு டீப்ரொமோட் ஆகிருமோனு பயப்படுறீங்க. ஒரு டைரக்டரா நான் இந்த பாட்டுதான் படத்துக்கு முழு அர்த்தத்த கொடுக்கும்னு நம்புறேன். வேற யார் சொல்றதையும் கேக்காதீங்க சார், இந்த பாட்ட கேட்டுட்டு நீங்களே முடிவு பண்ணுங்க சார்.” என்று சொல்லிக்கொண்டே ஹெட்போனை அவரின் காதில் வலுக்கட்டாயமாக வைக்கிறான். போனில் Rhythm of Souls என்ற ட்ராக்கை ப்ளே செய்கிறான். அவரை நம்பிக்கையுடன் பார்க்கிறான்.

******

2

இசை ரிலீஸ் ஆகி வைரல் ஆகிறது. அனைத்து மக்களையும் கவர்கிறது. பெரும் கலைஞர்கள் பலரையும் தாண்டி உள்ளூர் விருது முதல் உலக விருது வரை அனைத்தையும் ஒரு வலம் வருகிறது. உச்சகட்டமாக, இஸ்ரோ இந்த இசையை பூமியின் இசை என்று பெயர் சூட்டி தன் GSAT-6A சேட்டிலைட்டிற்கு அப்லோட் செய்து அதன் மூலமாக பிரபஞ்சத்திற்கு ஒளிபரப்பப் படுகிறது.

******

3

இலங்கையில் வசதியான வீடுகள் நிறைந்துள்ள ஒரு பகுதியில் ஒரு வீட்டில் ஒரு அறையில் ஒருவன் அந்த Rhythm of Souls என்ற இசையை டவுன்லோட் செய்கிறான்.

அவனது அறை முழுக்க ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்களும் பேப்பர் கட்டிங்களுமே அவன் சாதாரண இளைஞன் இல்லை என்பதை காட்டிவிடும். வாழ்க்கை, உயிர், ஆன்மா, உடல், பூமி, கோல்கள், நட்சத்திர அமைப்புகள், 9/11, நிக்கோலஸ் டெஸ்லா, JFK, Lincoln, Hitler, Osho, முனிவர்கள் போன்ற பலதரப்பட்ட விசித்திரமான புகைப்படங்கள் அவனது அறை முழுக்க ஒட்டப் பட்டிருந்தன.

******

4

சில வருடங்கள் கழித்து மூன்றாம் உலகப் போரினால் உலகமே அழிந்து வருகிறது. அனு குண்டுகளின் வீச்சில் மனித இனத்தோடு சேர்ந்து பல உயிரினங்கள் அழிகின்றன. மனிதர்கள் முழுவதும் சில மணி நேரத்தில் அழிந்து விடுவார்கள் என்று நம்பப்படுகிறது.

******

5

ஒரு பெண், தன் சக வீரர்களுடன் Space Station-ல் இருந்தபடி ஜன்னல் கண்ணாடி வழியாக உலகம் அழிவதைப் பார்க்கிறாள். அவள் பெற்றோருடன் அவள் இல்லாததை எண்ணி கலக்கம் கொள்கிறாள். அவர்களுடன் இருந்த ரோபோ ஒன்று ஆணென்றும் பெண்ணென்றும் குறிப்பிட்டு கூற முடியாத குரலில், “Connection with the Earth Stations has been lost. Please check the receivers for malfunctions”

அவள் சட்டென முடிவெடுத்தவளாய் தன் கண்ணீரை துடைத்துக் கொண்டு, வேகவேகமாக சென்று Landing Pod ல் நுழைகிறாள். அந்த ரோபோவும் அவளை பின் தொடர்ந்து வந்து அவளுடனே உள்ளே நிற்கிறது. அவள் கதவை மூடிக் கொள்கிறாள். அவளது முடிவை கணித்த மற்றவர்கள். அவளை தடுக்க முன்வருகிறார்கள்.

“ Sona what are you doing ? its completely insane, Landing on Earth is just a suicide.”

“Sona, Wait a minute. rethink what you are doing. Don’t be mad. Everybody on Earth might dead by now.”

“Sona, no point in going there. Nuclear radiations are all over the world. Please come out. Stay with us. We will be safe here. Sona. See here. Hey. Damn it. She is not listening. She is daparting the station. What the”

அவள் யார் சொல்வதையும் கேட்பதாய் இல்லை. Landing Pod ஐ ஸ்டேசனில் இருந்து பிரிக்கிறாள். பூமியை நோக்கி அதை இயக்குகிறாள். அவளையே பார்த்துக் கொண்டிருந்த ரோபோ, “You are mentally stressed at this moment. Your heart rate is abnormally high. Do you need your medical assistants right now?”.

அவள் பதிலேதும் சொல்லவில்லை. பதற்றத்தில் அவளுடைய கன்னங்கள் சிவந்திருந்தன. சில நொடிகளில் பூமியில் இருந்து ஒரு போர் விமானம் கட்டுப்பாட்டை இழந்து வந்து அந்த ஸ்பேஸ் ஸ்டேசன் மீது இடிக்கிறது. ஸ்பேஸ் ஸ்டேசன் வெடித்து சிதறுகிறது.

லான்சிங் பாட் புவி ஈர்ப்பு விசைக்குள் வந்ததும், பயங்கரமாக குலுங்க ஆரமித்தது. ரோபோ தன் கரங்களை உட்புற சுவர்களோடு பதிந்து பற்றிக் கொள்கிறது. அவள் தன் கண்களை இருக மூடிக்கொள்கிறாள்.

******

6

பல பேரிடி போன்ற சத்தங்களுக்கு பிறகு லான்சிங் பாட் மெல்ல தரையிறங்குவது அவளுக்கு தெரிந்தது. காலையென்றும் மாலையென்றும் சரிவர சொல்ல இயலாத ஒரு மங்கலான வெளிச்சம் அந்த இடத்தில் படர்ந்திருந்தது. அவள் தரை இறங்கிய இடம் ஒரு தீவு. உலகப்போரில் அந்த தீவின் பச்சை நிறங்கள் எல்லாம் கருகியிருப்பதை அவளால் பார்க்க முடிந்தது. ரோபோ அவளை பிந்தொடர்ந்து வந்தது. “Probably you are the only human species alive now on in this world. All the attempts to connect the satellite are currently unreachable except ISRO’s GSAT-6A”

புகை இன்னும் அடங்கவில்லை. காற்றெங்கும் சாம்பல் படிமங்கள் பறந்து கொண்டிருந்தன. செடிகளின் வேர் வரை தீ தின்றுருப்பதை பார்க்கிறாள். கரப்பான் பூச்சியொன்று அந்த ரோபோவின் காலில் ஏறிச்விட்டுச் சென்று ஒரு பொந்தில் மறைந்து கொள்கிறது. சொர்க்கத்தை ஒரே இரவில் நரகமாக்கியதுதான் மனிதனின் இறுதி சாதனையாக இருக்கமுடியும் என்று புலம்புகிறாள். “Finally, human had achieved something that no decendents could break. His Extinction.” என ரோபோவிடம் சொல்லிக் கொண்டே நடக்கும் போது, ஒரு பட்டுப்போன மரத்தின் அடியில் ஒரு மனிதனின் உருவம் அமர்ந்து இருப்பதைப் பார்க்கிறாள். ஒரு கனம் புத்தரின் உருவம் போல தெரிய, அவள் வேகமாய் அந்த திசையில் நகர்கிறாள். அது ஒரு ஆணின் உருவம். அமர்ந்த நிலையில் இருப்பதைக் கண்டு வியக்கிறாள். ரோபோ சட்டென அந்த உருவத்தின் அருகில் செல்கிறது. அந்த ஆண் உருவம் பல வருடங்களாய் சிகை திருத்தாமல், குளிக்காமல், இருப்பது தோற்றத்திலே தெரிகிறது. தோல்கள் சுருங்கி கன்னங்கள் ஒட்டிப் போய் இருக்கின்றன. ரோபோ அந்த உருவத்தை தொட்டதும்,

“The subjected species is a 35-year-old human male. He is not in a coma, but his consciousness is entrapped in a deep abyss or Limbo. His body is completely functional except that it needs some solid food first. And he is the only human eligible to mate with you to continue the human race.”

என்றதும், அவள் குறுக்கிட்டு,

“Wait, why do you say that? why should I mate with him at all? I just saw him. He is almost dead I think”

“Subject’s body is fully functional. You can mate him once you wake him from his hibernation”

“Stop using the word mate, I have no idea who the hell he is, and why should I have to have sex with him? I can’t understand.”

“From my observations, he and you are the last living human species on Earth. Without you two reproducing any other human babies, Earth has no humans in the future.

“There should be some other ways”

“My probability calculations results in human race in future is nill”

“Even so I don’t like my own species, they ended up the earth like hell, see around you”

“Not everyone is responsible for that. a few might be. You are scared of his appearance I assume. He will be looking good after a warm shower.”

“Stop convincing me for him, I don’t like it”

“He can convince you himself, once he wakes up”

“Oh Jesus, you sound like a fucking male”

“Language please”

“OK, how to wake him up?”

“All his senses connecting him to this physical world are inactive. Only his eardrums are active. Let him hear anything he could remember from his past”

******

7

ரோபோ அவனை இழுத்துக் கொண்டு லான்ச்சிங் பாட் வரைக்கும் அவளை பின்தொடர்ந்து வந்தது. அவள் ஒரு டேப்லட் போன்ற கருவியை எடுக்கிறாள். அவனது காதில் ஒரு ஹெட்போனை மாட்டுகிறாள். ஒவ்வொரு பாடலாக ப்ளே செய்கிறாள். எதிலும் அவன் அசையவில்லை. இரவெல்லாம் முயற்சித்துவிட்டு, அவள் களைப்படைகிறாள். இறுதியாக ரோபோ சொல்கிறது,

”if no sounds move him. try your voice.”

“Are you kidding me? you said something from his past. How can I have something from his past? and you said my voice now? nothing makes sense.”

“It’s a simple algorithm, any of your kind can understand. Some words from his language may help him. But I can retrieve only a single file of music from GSAT-6A. It is named Music of Earth. It may not wake him up, but we have nothing else.”

அவள் அந்த ஹெட்போன் ப்ளக்கை ரோபோவின் உடலில் இணைத்து அந்த இசையை ப்ளே செய்கிறாள்.

******

8

ப்ரொடியுஸரின் ஹெட்போனில் பாடல் ஒலிக்கிறது. இயக்குனர் நம்பிக்கையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

இலங்கையில் இருந்த இளைஞன் ஹெட்போனில் அந்த பாடல் ஒலிக்கிறது. பாடலை ரிப்பீட் மோட்டில் போட்டு கண்களை மூடியவன் அந்தப் பாடலை கவனிக்கிறான். அதில் செயற்கை அல்லாத பல இசைகள் சேர்ந்து ஒரு உன்னதமான கலவையாக அமைந்துள்ளது. Golden Ratio நமக்கு aesthetic ஆக உணர்வது போல், அந்த இசையும் மதிமயக்கும் ரம்யத்துடன் ஒலிக்கிறது. இதயத்துடிப்பின் அதிர்வு, அருவியின் பேரிரைச்சல், அலைகளின் ஆர்பரிப்பு, மரங்களின் முனுமுனுப்பு, மழையின் சலசலப்பு, வண்டுகளின் ரெக்கை சத்தம், டால்பின், திமிங்காலம், யானை, ஹைனா, என தொடங்கி, வார்த்தைகள் அல்லாத ஹம்மிங் போன்ற மனித சத்தத்தோடு அந்த இசை ஒலித்துக் கொண்டிருக்கிறது.

அந்த இளைஞன், பாடலை கேட்டுக் கொண்டே வீட்டை விட்டு வெளியே செல்கிறான். தெருக்களை கடந்து செல்கிறான். நகரைவிட்டு வெளியே வருகிறான். காடுகள் கடந்து கடற்கரையை அடைகிறான். கடலோரமாக நடக்கிறான். ஒரு படகை எடுத்துக் கொண்டு தனியே துடுப்பு போட்டுக் கொண்டு கடலுக்குள் செல்கிறான். ஒரு தீவில் இறங்குகிறான். தீவின் காடுகளுக்குள் நடக்கிறான். மான் இனங்கள் அவனைக் கண்டு துள்ளி ஓடுகின்றன. ஒரு பெரிய பச்சை படர்ந்த மலை போன்ற மரத்தடியில் தியானம் செய்வது போல் அமர்கிறான். பாடல் முடியும் தருணம் வருகிறது.

ப்ரொடியூசர் இசையை ரசிக்கிறார். இயக்குனர் வெற்றிபெற்றது போல் மகிழ்கிறான்.

சோனாவும் ரோபோவும் அவனை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவனது கண் விழி லேசாக அசைவது இமைகளுக்கு மேல் தெரிகிறது. சோனாவும் ரோபோவும் ஆர்வத்துடன் அவனை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

பச்சை மரத்தின் கீழ் தெளிவான இளைமை ததும்பும் பொலிவுடன் அமர்ந்தவன் தன் தெளிவு நிறைந்த கண்களை மூடுகிறான்.

லான்ச்சிங் பாடின் அருகில், சோனாவும் ரோபோவும் பார்க்க படுத்துக் கிடந்த நாற்பது வயதுடைய ஆளாக கண் விழிக்கிறான். அவனது கண்களில் முன்பைவிட அதிக பொலிவு தெரிகிறது.

இசை முடிகிறது.

*** THE END ***

imagination by

சூர்யதேவன் வாசு

2 thoughts on “சிறுகதை: Rhythm of Souls”

  1. இந்த சிறுகதை படிக்க படிக்க என் உணர்வுகளை தூண்டி சிறுகதைக்குள் நானும் இருப்பது போன்று ஓர் உலகில் இக்கதையோடு பயணித்தேன்

    Reply
  2. கற்பனையும் கலையும் கலந்த காவியம் இந்த சிறுகதை , கதையை முழுவதும் படிக்க தோன்றும் ஆர்வம் அதன் தலைப்பிலயே தோன்றியது்.

    Reply

Leave a Comment