Keyboard கிறுக்கல்கள்

உசுரு என்ன வெல?

உசுரு என்ன வெல?
இங்க உசுரு என்ன வெல?
மனசு யாருக்கு இல்ல!
இங்க மனசு யாருக்கும் இல்ல!

மயிராப்போன வாழ்க்கைல
பிளேடு வாங்கக்கூட காசு பத்தல!

வேலதான் பாதி வாழ்க்க!
ரெஸ்ட்டுதான் மீதி வாழ்க்க!
மொத்தத்துல
வேஸ்ட்டுதான் இந்த வாழ்க்க!

சந்தோசம் எங்க போச்சி?
சம்பள கவரோட கசங்கி போச்சி?
காச தேடும் கண்ணாமூச்சி
கடசில வாழ்க்க காணாம போச்சி!

வந்த வழி தெரியாம
போற வழியும் புரியாம
பாலைவன வாக்கா வாழ்க்க போச்சி!

இந்த உலகம் நமக்கில்ல
இந்த வாழ்க்க மட்டுமே நமக்கு
யுகங்களாய் சுழலும் பூமியில
நகங்களாய் வளரும் விஷம் நாம
அழுக்கு நிறைந்த கோர
நகங்களாய் வளரும் விஷம் நாம

தரத்தினும் நிறம் விரும்பும் தரித்திரம் நாம
அறத்தினும் ஆசையை போற்றும் அரைவேக்காடு நாம

குழந்தைய வளக்காம 
ஏடிஎம்மை வளக்கும் முதலாளி நாம!
பாசத்தை விதைக்காமல் 
பணத்தை விதைக்கும் இன்வெஸ்டர்ஸ் நாம!

அரசாங்கம் நம்மகிட்ட என்ன சார் எதிர்பாக்குது ?

வரி கட்டு... கட்டுன வரிக்கு கணக்கு கேக்காத... கேட்டாலும் தரமுடியாது முடிஞ்சத பாத்துக்கோ...

என்ன எழவ வேண்ணாலும் படி... வேல கேக்காத... காசு இருந்தா கட்டி வாங்கிக்கோ...

நாங்க விக்குற சாராயத்த வாங்கி குடி... டிடி கேஸ் போடுவோம் பணத்த கட்டு... போதை ஏறி கொலை கொள்ளை கற்பழிப்பு பண்ணா.... புடிச்சி ஜெயில்ல போடுவோம்...

சட்டம் போடுவோம்... எல்லாருக்கும் சட்டம் சமம்னு சட்டம் பேசாத... இங்க எல்லாத்துக்குமே ஒரு விலை இருக்கு...

போலிஸ் ஸ்டேசன் இருக்கும்... கம்ப்ளைன்ட்லாம் குடுக்காத... காவல் உங்களுக்கு இல்ல... காசு வச்சிருக்கவங்களுக்கு...

கோர்ட் இருக்கும்... கேஸ் போட்டு டைம் வேஸ்ட் பண்ணாத... வாய்தா வாங்கி வாழ்க்கையே முடிஞ்சிரும்...

பேங்க் இருக்கும்... காச போடு... போட்ட காசு குறையும்... ஏன்னு கேள்வி கேக்காத... இங்க இதான் ரூல்ஸ்...

தொழில் தொடங்கு... சுத்தி சுத்தி டேக்ஸ் புடிப்போம்... தல சுத்தி விழுந்திறாத...

தியேட்டர்ல புகைபிடித்தல் புற்றுநோய் உண்டாக்கும் னு சொல்லுவோம்... ஆனா ஹீரோ ப்ரொமோட் பண்ணுவாரு... வெளிய கடைல விக்க அனுமதி தருவோம்... வாங்கி குடிச்சிட்டு சாவு...

நாங்க போடுற ரோடு புட்டுகிட்டுதான் போவும்... விழுந்து சாவாம இருக்க நீதான் ஹெல்மெட் வாங்கி போட்டுக்கனும்... இல்லனா அதுக்கும் ஃபைன் போடுவோம்...

எப்ப வேண்ணாலும் எந்த துறைய வேண்ணாலும் தனியார்கிட்ட தருவோம்... ஏன்னா இங்க அரசாங்கமே தனியார் கைலதான் இருக்கு...

விழிப்புணர்வு ஏற்படுத்துறேன்னு துண்டு பிரசுரம் நீட்டாத... தீவிரவாதினு புடிச்சு ஜெயில்ல போட்ருவோம்...

நாம் அல்லவா?

இதழ் முத்தத்திற்கு அலைந்து,
உடல் வெப்பத்தில் வியர்த்து,
இடை உரசலில் லயித்து,
வேக உச்சத்தில் மூச்சிரைத்து,
வென் னொளி வெள்ளத்தை உமிழ்த்து,
செவ் வான் கடலில் நீந்தி,
தேன் சிப்பிக்குள் முத்தெடுத்தவர் நாமல்லவா?

இடை பள்ளத்தில் முளைத்து,
இருள் பையினுள் வளர்ந்து,
சிறு ஒட்டுண்ணியாய் கொளுத்து,
உதிரத்தை உறிஞ்சி,
உண்டதை உமட்டி,
ஒன்பது திங்கள் சுமந்தவளை உதைத்து,
அடிவயிற்றை அறுத்து வெளிவந்து அலறியவர் நாமல்லவா?

முதல் தாகத்தை தாய்ப்பாலில் தனித்து,
ஒருத்தியின் உயிரைவிட்டு மொத்தத்தையும் பறித்து,
ஒரு வருடம் உளறிப் பேசி,
மறு வருடம் இடறி நடந்து, 
சில வருடம் ஈன்றவள் ஊணுடைத்து,
பள்ளியிலும் கற்று,
மந்தையில் மடையராய் நின்றவர் நாமல்லவா?