Keyboard கிறுக்கல்கள்

சாப வரம்

விம்மி  விழுங்கினாலும்
கதறி அழுதாலும்
கண்ணீர் உவர்ப்புதான்...

கலவிக் களைத்தாலும்
கரம்பிடித்து நடந்தாலும்
காதல் இனிப்புதான்...

இதழ் நீளம் கூட்டினாலும்
இடிமுழங்க வாய்ப் பிளந்தாலும்
சிரிப்பு அழகுதான்...

மெளனமாய் வெறித்தாலும்
மண்டையைப் பிளந்தாலும்
கோவம் காரம்தான்...

உறக்கத்தில் மாண்டாலும்
தீயில் கருகினாலும்
மரணம் கோரம்தான்...

கடைக்கண்ணில் கவனித்தாலும்
புருவங்கள் சுருக்கினாலும்
சந்தேகம் பாவம்தான்...

சிரித்துக் கொண்டே கடந்தாலும்
முறைத்துக் கொண்டே நகர்ந்தாலும்
வாழ்க்கை ஒரு சாபவரம்தான்...!

பட்டாம்பூச்சி

பட்டாம்பூச்சியை
எனக்குப் பிடிக்கும்.
கண்ணில் பட்ட
ஒரு பட்டாம்பூச்சியை
துரத்திப் பிடித்தேன். 
என் விரல்களில் 
அதன் நிறங்கள்.
ஆனந்தமாய்
நான் சிரித்து முடித்தேன். 
பட்டாம்பூச்சி சாகத் தொடங்கியது. 

பட்டாம்பூச்சியை
எனக்குப் பிடிக்கும். 
பட்டாம்பூச்சிக்கு
என்னைப் பிடிக்காதா?

கேள்விகள் கோடி
என்னைச் சுற்றி வளைக்க
ஸ்தம்பித்தது மனம்.
பேரமைதி கொண்டேன். 
சிலையென இருந்தேன். 

தேன் தேடும் 
பட்டாம்பூச்சி ஒன்று
என் விரலில் வந்து அமர்ந்தது.
அதன் நிழல் 
அதன் நிறத்திலேயே இருந்தது. 
அது பறந்துப்போனப்பிறகும்
அதன் வண்ண நிழல்
என் விரலோடு இருந்தது. 

இந்தப் பட்டாம்பூச்சிக்கு
என்னைப் பிடித்ததா?
பதில் கிடைக்காத
கேள்விகளைக் கிழித்துக்கொண்டு
பட்டாம்பூச்சியாய்
மனம் பறந்தது.

நானே சேயாக வேண்டும்

எங்கே போகிறேன்?
நான் எங்கே போகிறேன்?
என்னை விட்டு நான் தூரம் போகிறேன்!
போகும் இடமென்ன தெரியாமல்,
வந்த பாதை புரியாமல்,
தொலை தூரம் போகிறேன்.
தொலைந்து தூரம் போகிறேன்.
வேஷம் கலைக்க பார்க்கிறேன்.
சாயம் கரைய நனைகிறேன். 
கண்ணீர்குக் குளத்தில் மூழ்கிறேன்.

அன்பு ஒன்றும் இல்லை. 
ஆசை ஒன்றும் இல்லை. 
சிரிப்பு ஒன்றும் இல்லை. 
நிம்மதி ஒன்றும் இல்லை. 
தூக்கம் ஒன்றும் இல்லை. 
வாழ்க்கை ஒன்றும் இல்லை. 
ஆறறிவு பிறவி சாபம். 
ஆருடம் புலம்பும் சோகம். 
ஆறுதல் இல்லை யாரும். 
யாஆருதான் இல்லை பாவம். 

மடி ஒன்று வேண்டும்.
என் தலை கோதும் விரலைந்து வேண்டும்.
நிம்மதி ஒன்று வேண்டும்.
நல்லது சொல்லி நறுக்கென கொட்டி,
எண்ணெய் வைத்து வகுடெடுத்து வாரி,
பருப்பில் நெய்யூற்றி பாசமாய் சோறூட்டி,
தாலாட்டு பாடி தூங்க வைக்க 
தாயொருத்தி வேண்டும்.
மீதி ஆறு பிறவியிலும், 
அவளுக்கு நானே சேயாக வேண்டும்.