நிலா காற்று காதல்
பார்ர்க முடியும் நிலவை
தொட முடியவில்லை
தொட்டுப்போகும் காற்றை
பார்க்க முடியவில்லை
நிலாவிற்க்கே
சென்றுவிடலாம் என்றால்
காற்று வீசுமா என்று
தெரியவில்லை!
பார்த்தும் தொட்டும் பேசவே
நிலவொன்று வேண்டும்!
தொட்டுபோகும் தென்றலை
ஒரு நாளாவது பார்த்துவிட வேண்டும்!
காணாமல் போனவர்களைப் பற்றிய அறிவிப்புகாணாமல் போனவர்களைப் பற்றிய அறிவிப்பு.
பெயர் என் பெயர்.
உயரம் என் உயரம்.
அடையாளம் இதைப் படித்துக்கொண்டிருப்பார்.
மனநலம் பாதிக்கப்பட்டும்
நன்றாக இருப்பதுபோல் காட்டிக்கொள்வார்.
தொலைந்தபோது 'தொலையாலமல் இருப்பது எப்படி?'
என்ற புத்தகம் படித்துக்கொண்டிருந்தார்.
இவரைப்பற்றிய தகவல் தெரிந்தால்
யாரிடமும் சொல்லிவிட வேண்டாம்.
நிம்மதியாக இருக்கட்டும்.
விட்டுவிடுங்கள்.
தொலைஞ்சது கிடைக்கும்.தொலைச்சத தொலைச்ச
இடத்துலதானே தேடனும்.
தொலைச்சவ தானே தேடனும்.
தொலைஞ்சிப் போனவன்
அந்த இடத்துலையே தானே இருக்கனும்.
தொலைச்சவள
தொலைஞ்சி நிக்குறவன்
தேடிப்போறானே!
அவள் வர மாட்டாளா?
திரும்பி வந்து தேட மாட்டாளா?
தெரியாமல் தொலைத்தால்தானே
திரும்ப வருவாள்?
அவள் தெரிந்தேதான் தொலைத்தாள்.
இதைவிட அவள் என்னை
தூக்கி எறிந்து இருக்கலாம்.
விறகடுக்கி எரித்து இருக்கலாம்.
நான் வேண்டாம் என்றா
தொலைத்துப் போனாள்.
நான் மட்டுமே போதும்,
வேறெதுவும் வேண்டாம் என்பாதாலே
தொலைத்துப் போனாள்.
நான் தொலைத்த நானும்,
நீ தொலைத்த நானும்,
தொலைச்சவ கிடைப்பாள்
என்று தேடிக்கொண்டிருக்கிறோம்.
வழி யெங்கும் உன் நிழல்.
செவி முழுக்க உன் குரல்.
விழி யெங்கும் உன் உருவம்.
மதி முழுக்க உன் முகம்.
பாதை யெங்கும் உன் தடம்.
பூக்கள் தோறும் உன் மனம்.
மூச்சு நிறைய உன் பெயர்.
தொலைஞ்சது கிடைக்கும்.
மீண்டும் தொலையும்.
மாண்டும் தொலையும்.
மீண்டும் கிடைக்கும்.
கிடைச்சது மீண்டும் தொலையும்.
தொலைப்பதும்
தேடுவதுமே
மழலையின் அழகு!
மழலையாய் மாறி தேடு!