Keyboard கிறுக்கல்கள்

நிலவுக்கு விடுமுறை

சூரியனின் வருகை நித்தம் நிகழும்.
மேகம் மறைத்தாலும்,
மழை நனைத்தாலும்,
சூரியன் வருவதை நிறுத்துவதில்லை!
நிலாவிற்கோ பெரும் குழப்பம்.
நெடுநாள் தயக்கம்.
கொஞ்சம் கொஞ்சமாய் வளரும்.
மெது மெதுவாய் மறையும்.
ஒரு நாள் முழுமதியாய்.
ஒரு நாள் பேரமைதியாய்.
அமாவாசை யாருடைய ஆசை?
ஆசை இல்லையென்றால் கோபமா?
நட்சத்திரங்கள் மீது கோபமா?
மேகத்தின் மீது கோபமா?
வான் மீது கோபமா?
என் மீது கோபமா?
நிலவுக்கே இது சாபமா?
எங்கேயும் செல்லாத நிலா.
எப்போதும் மறையாத நிலா.
விடுப்பு எடுக்காத நிலா.
யாருக்கு வேண்டும்?
எனக்கு வேண்டாம்.
விடிந்தும் சிலநாள் வரட்டும்.
சூரியனோடு ஜோடி சேரட்டும்.
கிரகணத்தில் சூரியனும் மறையட்டும்.
வானில் வினோதங்கள் நிகழட்டும்.
நிலவும் தன் இஷ்டம்போல் வரட்டும் போகட்டும்.
விடுமுறை எடுக்கட்டும்.
ஹார்மோன்களின் ரிதம்

ஆசை வரும்போது
அதை மூடிமறைப்பாள்!
கோவம் வரும்போது
அதை மூடாமல் முறைப்பாள்!

அன்பைக்கூட 
சொல்லாமல் இருப்பாள்!
வெறுப்பை மட்டும் 
வெடுக்கென கொட்டுவாள்!

பேசத்தோன்றினால் 
ஆயிரம் முறை யோசிப்பாள்!
பேசாதிருக்கத் தோன்றினால் 
அக்கனமே மௌனிப்பாள்!

பழகும்போது 
ஃபர்ஸ்ட் கீரில் தொடங்குவாள்!
டாப் கீரில் இருந்தாலும் 
பட்டென ஹண்ட் ப்ரேக் போடுவாள்!

ஹார்மோன்களின் ஊற்று
நிலவு போல் வளரும் குறையும்.
இவற்றில் எல்லாம் ஒரு ரிதம் உண்டு.
அது ஒரு பேட்டர்ன். டிசைன்.

ரசிக்கத் தெரிந்தவனுக்கு
அழகான அற்புதமான ஆச்சர்யமான
ஹார்மோனிக் ரிதம்.
ஹார்மோன்களின் ரிதம்.
இருள் தொடுத்த மலர்

இருளில் உதித்த உயிரிது.
பகலில் லயிக்க மறுக்கிறது.

இருளில் பசிக்கும் மனதிது.
பகிலில் புசிக்க கசக்கிறது.

இருளில் வாழும் பேயிது.
பகலில் உலவ கண்கூசுது.

பளிச்சிடும் வெளிச்சம் வெறுக்குது.
ஒரு துளி நிலவொளி கேட்கிறது.

இருள் தரும் மலர் எல்லாம் வென்னிறமாம்
நீ மட்டும் என்னவாம்?

இருள் உகித்த பனித்துளி எல்லாம் ச்சில்லிடுமாம்.
நீ மட்டும் என்னவாம்?

இருள் சொல்லும் கதையெல்லாம் சிலிர்த்திடுமாம்.
நீ மட்டும் என்னவாம்?

இருள் தோன்றும் கனவெல்லாம் கலைந்திடுமாம். 

கனவே நீ மட்டும் கலையாதே!