நகரங்களில் மசாஜ் சென்டர்கள் இருக்கும். பணம் பணம் என்று அலைபவர்கள் ஒரு கட்டத்தில் கால் அமுக்கிவிடக்கூட மனைவி மகள்களின் அன்பு கிடைக்காமலோ, உடல் உழைப்பற்று கிடப்பதால் வரும் சோர்வினாலோ ஒரு இளைப்பாறுதலுக்காக மசாஜ் சென்டர்கள் செல்வார்கள். அங்கு எண்ணை ஊற்றி உடலை நீவி விடுவார்கள். ஒருவாறு உடலின் இளைப்பு மனதிற்கும் ஒரு புத்துணர்வைக் கொடுக்கும்.
கிராமங்களில் பகல் பொழுதுகளில் வயல்களில் வேலை பார்த்துவிட்டு இரவில் டென்ட்டு கொட்டாக்களில் சிவாஜி எம்.ஜி.ஆர் படங்களைப் பார்த்து இளைப்பாறுவர். சில கண நேரம் வேறு ஒரு உலகத்துக்கு பயணித்துவிட்டு வந்த உணர்வு கிடைக்கும். மீண்டும் மறுநாள் மாலைப்பொழுதை நினைத்தபடியே பகல்நேர வயல் வேலைகள் எப்படி முடிந்தது என்றே தெறியாத அளவுக்கு அவர்களின் உள்ளம் புத்துணர்வு பெற்றிருக்கும்.
மசாஜ் சென்டர்களின் கொள்ளை லாபத்தை கண்டு வெறி கொண்டு புதிதாக பல மசாஜ் சென்டர்கள் திறக்கப்பட்டன. எதிர்பார்த்த அளவிற்கு லாபம் பெய்யவில்லை. காரணம் புதிதாக நூறு சென்டர்கள் தொடங்கிவிட்டபடியால் மக்கள் தொகையும் நூறு மடங்கு ஆகிவிடுமா என்ன ? அங்குதான் உதயமானது “ஃபுல் பாடி மசாஜ் வித் ஹாப்பி என்டிங்க்.” ஆரம்பத்தில் சற்று அபத்தமாகத்தான் இருந்தது. மெல்ல மெல்ல Complimentary ஆக இருந்தது. இப்போது Supplementary ஆக மாறிவிட்டது. வேலையின் பளு காரணமாக மசாஜிற்கு வருவோற் போக ஹாப்பி என்டிங்கின் சுகத்திற்காக வேலைக்கே போகாத உடல் சோர்வே இல்லாத பெரும் இளைஞர் கூட்டம் மாசாஜ் சென்டர்களின் முகவரியை தேடலானார்கள்.
சினிமாவின் முந்தைய வெர்சனான நாடகம் ஒரு கலை தான். எப்போது ஆட்டத்தைப் பார்த்து காசு போடும் வழக்கம் மாறி, எப்போது காசு கொடுத்து ஆட்டத்தைக் காண ஆரமித்தோமோ அப்போதே நாடகம் ஒரு வியாபாரம் ஆகி விட்டது. சினிமாவில் ஹீரோயினை காப்பாற்றனும், ஹீரோ ஜெயிக்கனும், வில்லன் தோற்கனும் போன்ற இலக்கணத்தை கடந்து ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் ரொமான்ஸ் ஸீன்கள், இடுப்புக் காட்சிகள், மார்புக்கு மத்தியில் தேளை ஊர விட்டு குத்தும் காட்சிகள், கற்பழிப்பு காட்சிகள், இரட்டை வசனங்கள், முதலிரவு காட்சிகள், கட்டில் கால்கள் ஆடும் காட்சிகள் என வளரந்து த்ரிஷா இல்லனா நயன்தாரா, ஹர ஹர மகாதேவகி, இருட்டு அறையில் மொரட்டு குத்து வாக உருவெடுத்து நிற்கிறது. கேட்டால் இது போன்ற படங்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதாக பேட்டி அளிக்கவும் கூச்சப்படாத ஒரு கூட்டம் சினிமா ஒரு என்டர்டெயின்மென்ட் மீடியம், porn hub இல்லை என்பதை மறந்துவிட்டு திரிகிறது. தியேட்டருக்கு வருபவர்கள் ஒரு அனுபவத்தோடு வீடு திரும்ப வேண்டும். அரிப்புடன் திரும்பி நினைத்து நினைத்து ஆர்காசம் அடையக்கூடாது.
டாக்குமெண்டரி போல எடுக்க சொல்லவில்லை. ஓகே கண்மணி, ஜோக்கர், போன்ற வக்கிரமற்ற பல படங்களை இருக்கின்றன. லாபத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்யும் இச்சமூகம், இன்ப போதைக்காக எதை வேண்டுமானாலும் ஆதரிக்கும் நிலைக்கு நகர்ந்து வருவதற்கு வக்கிரங்கள் நிறைந்த வணிக நோக்கமுள்ள படங்கள் திடமான அடிக்கல் நாட்டி வருகின்றன. இன்னும் சிந்திதீர்களானால், மனிதனென்பவன் ஒரு imitating animal, எதைப் பார்க்கிறானோ அதைத்தான் இமிடேட் செய்வான். பகுத்தறிவு பெற்று இச்சமூகம் செழித்து வளரும் நாளைக் காண ஆவலுடன் பங்களித்து வரும் #உன்னைப்_போல்_ஒருவன்
Surya Vasu
-27.07.2018