Category Archives: Social

தற்கொலைக் காதல்கள்

காட்சி 1:

வழக்கம் போல ஆஃபிஸுக்கு வெளியில் நின்று ஃபோனில் சில வீடியோக்களை பார்த்துக்கொண்டிருந்தேன். ஆபிஸுக்குள் என்ன செய்வதென்று தெரியாமல்தான் வெளியே வந்து  பால்கனியில் வசதியாக ஒரு கார்னரை தேர்வு செய்து சாய்ந்து நின்றுகொண்டேன். இப்போது ஃபோனில் பார்த்துக்கொண்டிருந்த வீடியோக்களும் ஒரு சலுப்பை ஏற்படுத்தின. ஃபோனை லாக் செய்து பேண்ட் பாக்கெட்டில் போட்டுக்கொண்டேன். சிலாகித்து ரசிக்கும் அளவிற்கு காற்று ஒன்றும் வீசவில்லை. சில நாட்களுக்கு முன்பு இரவு காணக்கிடைத்த காட்டுத்தீயும் அந்த மலையில் இன்று ஜொலிக்கவில்லை. சற்றே பெரும்மூச்சுடன் திரும்பி இரண்டாவது மாடியில் இருந்து அருகில் இருந்த ரவுண்டானாவை வேடிக்கைப்பார்த்தேன்.

எப்போதும் அந்த ரவுண்டானாவில் வாகனங்கள் சுழன்று சென்று கொண்டேயிருக்கும். உயரத்தில் இருந்த வாகன நெரிசலைக்காண்பதே ஒரு அலாதி இன்பம்தான் போல இருந்தது. எல்லாத்துக்கும் உயரத்தில் இருக்கும் கடவுளுக்கும் நாம் சுற்றிக்கொண்டிருப்பதைப் பார்ப்பதற்கும், நாம் முட்டிக்கொள்வதைப் பார்ப்பதற்கும் வேடிக்கையாக இருக்குமோ என்னவோ. நாமக்குள்ளும் கடவுள் இருப்பாரென்றால், கடவுளுக்குள்ளும் நாம் இருக்கலாம் தானே. இன்று அப்படி ஒரு சம்பவம்.

ஒரு பெண், சேலைக்கட்டிக்கொண்டு நடுரோட்டில் நிற்கிறாள். எவ்வளவு நேரமாக அங்கு நிற்கிறாள் என்று எனக்கு தெரியாது. பைக்கில ஒரு ஆள் வந்தான், அவளது கையைப்பிடித்து வண்டியில் ஏற சொன்னான். துல்லியமாக என்ன பேசினார்கள் என்று இரண்டாவது மாடியில் இருந்த எனக்கு தெரியாது. அங்கிருக்கும் ஐம்பது  வண்டிகளின் சத்தமும் அவற்றிலிருந்து  வரும் நூறு ஹாரன் சத்தமும்  அவர்களின் பேச்சை நசுக்கியிருந்தன. அவர்களை யாரும் மோதிவிடவில்லை. இருந்தாலும். வேறு என்ன சொல்லிருக்கப்போகிறான்? பத்து  நொடிகளாவது அவள் இசைவதாக இல்லை.

எனக்கு என் மனைவியின் ஞாபகம் வந்தது. அவளும் ஆஃபிசுக்கு உள்ளேதான் இருந்தாள். வேகமாக சென்று அவளை அழைத்து வந்தேன். அந்த முப்பது நொடிகளும் அவர்கள் அங்கேயே இருப்பார்கள் என்று பேராசைதான் எனக்கு. ரவுண்டானாவின்  அருகில் ஒரு ஜோடி நிற்பதையும் அவன் வந்த பைக்கும் நடுரோட்டிலே இருப்பதையும் அவள் பார்த்தாள். நாங்கள் அந்த எபிசோடுகளை கடந்து வந்தாயிற்று என்றவாறு பேசினோம். எப்படியும் அவ ஏறி போயிருவா. வேற என்ன செய்ய முடியும்? என நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். நாங்கள் அந்தக்காட்சியைப்  பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அந்த ஆள் அந்தப்பெண்ணின் காலில் விழுகிறான், அவள் பின்னால் நகர்ந்து அவனது கையை விலக்குகிறாள். அவள் அப்போதும் வண்டியில் ஏறி உட்காரவில்லை. நாங்கள் எதிர்பார்த்ததைவிடவும் ஐந்து ஆறு நிமிடங்கள் அவள் அசையவில்லை. அவனோ வண்டியில் ஏறி உட்கார்ந்துக்கொண்டு அவளது கைகளைப்பற்றி கெஞ்சிக்கொண்டு இருக்கிறான். இறுதியில் அவள் வண்டியில் ஏறி உட்கார்ந்து கொண்டாள். அவளது முந்தானையை அள்ளி மடியில் பிடித்துக்கொண்டாள். அவளது முகத்தில் கண்ணீர் இல்லை. சிரிப்பு இல்லை. வாழ்வின் மீதான பெரும் கோபமும், வெறுப்பும் மட்டும் நிறையவே இருந்தன. அவர்களது பைக் கிளம்பிப்போவதைப்பார்த்துக்கொண்டிருந்த செளமியா,”நீயா இருந்திருந்தா நேரா ஒரு ஹோட்டலுக்குதான் வண்டிய விடுவ.” என்று சொல்லி நகைத்தாள். “ஆமா, சாப்பாட்ட முன்னாடி வச்சிகிட்டு யாராலும் சண்ட போட முடியாது”என்று என் சாப்பாட்ராம கேரக்டருக்கு வக்காலத்து வாங்கினேன்.

காட்சி 2:

பிறகு பேசி முடித்துவிட்டு, வேலையையும் முடித்துவிட்டு ஆஃபிசில் இருந்து கிளம்பினோம். செளமியா வந்த டியோவில் அவளும், நான் வந்த காரில் நானும் கிளம்பினோம், அப்போது அன்றிரவு செய்வதற்கு நான் சில திட்டங்கள் வைத்திருந்தேன். அதில் செளமியா இல்லை. அவளிடம் அனுமதி கேட்டேன். ஒழுங்காக வீட்டுக்கு வா என்று அதட்டலுடன் ஆணையிட்டாள். வீட்டில் பேசிக்கொள்ளலம் என்று மலுப்பிக்கொண்டிருந்தேன். அந்நேரம், ஆஃபிசின் அருகில் ஒரு இருபதைத்தாண்டிய ஆண் பிள்ளை, நல்ல உயரம், யாருடனோ ஃபோனில் பேசிக்கொண்டிருந்தான். சட்டென சிறுபிள்ளைப்போல அழ ஆரம்பித்தான். அழுதுக்கொண்டே சில சில வார்த்தைகளை உச்சரித்தான். நான் செளமியாவிடம் கேட்டேன், “தம்பி என்ன பேசுறாரு?”. யாருக்கு தெரியும்? ஒன்னும் கேக்கல. ட்ராபிக் எத்தனை பேச்சுக்களை முழுங்கிக்கொண்டிருக்கும் ஒரு ராட்சசன் என்பதை உணர்ந்துகொண்டேன். அந்த ராட்சசனைத்தாண்டி ஒரே ஒரு வார்த்தை மட்டும் எனதிரு காதுகளில் விழுந்தது. “சொல்லுடி” என்ற வார்த்தை. பிறகு, இருவரும் அங்கிருந்து கிளம்பினோம்.

காட்சி 3:

நான் வீட்டுக்கு செல்லும் வழியில் எனது தம்பி அர்ஜுனை சந்திக்க வேண்டியிருந்தது. வழக்கமாக நாங்கள் செல்லும் டீக்கடைக்கு அருகில் காரை நிறுத்தினேன். அவன் வரும் வரை காரிலேயே காத்திருந்தேன். எல்லா ஜன்னல்களும் மூடியிருந்தும் யாரோ கத்தும் சத்தம் கேட்டது. வெளியே இறங்கி யாரெனப் பார்த்தேன். அவன் யாருடனோ ஃபோனில் பேசிக் கொண்டிருந்தான்‌. “ஏய், நீ, வா, போ, டி” என்ற சொற்களின் மூலம் மறுபக்கத்தில் இருப்பது ஒரு பெண் என யார் வேண்டுமானாலும் யூகித்துவிடலாம். இங்கு மட்டும் சாலையில் ஓடிக்கொண்டிருக்கும் வண்டி சத்தத்தை விடவும் இவனது சத்தம் பலமாய் இருந்தது. ஆத்திரத்துடன் கத்தி கத்திப் பேசினான்‌. நான்கு நடை கிழக்கும் திரும்பி நான்கு நடை மேற்கும் என திரும்பத் திரும்ப நடந்துக் கொண்டிருந்தான்‌. நான் எனது காரை சற்று நகர்த்தி அவனுக்கும் காருக்கும் பத்து மீட்டர் இடைவெளி விட்டு நிறுத்திக்கொண்டேன். ஆத்திரத்தில் அருகில் இருக்கும் பொருட்களை உடைப்பது ஆண்களின் இயல்பு என்று எண்ணினேன். ஏன்னா நான் அப்டிதான்.

காட்சி 4:

தம்பி  அர்ஜுன் வந்தப்பிறகு அவனுடன் பேசிக்கொண்டிருந்தேன். நான்சி யா காயத்ரியா என்பது அவனது குழப்பம். நான்சிக்கு அர்ஜுனைப் பிடித்திருக்கிறது. நான்சி க்ரிஸ்டின், அவளைக்கட்டிக்கொள்ள வேண்டுமானால் கிறுத்துவ மதத்திற்கு மாறவேண்டும் என்பது அவளின் அம்மாவது நிபந்தனை. நான்சியும் அம்மாவின் விருப்பப்படியே எல்லாமும் நடக்கனும் என்று சொல்லிவிட்டாள். நான்சி ஒரே பொண்ணு. வேற யாரும் இல்லை. அப்பா எப்போதோ இறந்துவிட்டார். குடும்ப சொத்தாக ஒரு கோடி இருக்கலாம். மேலும், நான்சி சொந்தமகள் இல்லை, வளர்ப்பு மகள் என்றும், இது அவளுக்கு மட்டும் தெரியாது என்றும் கூறினான். நான் குறுக்கிட்டேன், கண்டிப்பாக அப்படி இருக்க வாய்ப்பு இல்லை. நான்சியிடம் யாராவது இதை சொல்லி இருப்பார்கள். ரகசியத்தை ரகசியமாக வைத்திருப்பதில் நம்மூர் ஆட்களுக்கு எந்த ஒரு கிக்கும் கிடைக்கப்போவது இல்லை. ரகசியத்தை கசியவிடுவதிலேயே தனது கெத்தைக்காட்டிக் கொள்ளும் கூட்டம் இது.

பேசிக்கொண்டிருக்கும் போது இடையில் செளமியாவிற்கு கால் செய்து 

நான், “பத்து இருவதுக்கு மாமனிதன் படத்துக்கு போலாம் வரியா?”, 

அவள், “யாரெல்லாம் போறீங்க?”;

நான், “வேற யாரு நீயும் நானும் மட்டும்தான். வேற யார நீ எதிர்பாக்குற?”

அவள், “எப்டியும் உன் ஃப்ரெண்ட்ஸ், அர்ஜுன், யாராவது வருவாங்களே!”

நான், “அதெல்லாம் யாரும் இல்ல, நீயும் நானும் மட்டும்தான், சீக்கிரம் சொல்லு, இப்பவே மணி ஒம்பதே முக்கால்.”

அவள் நீண்ட யோசனைக்குப்பிறகு வரவில்லை என்றாள்.

அர்ஜுன், காயத்ரியைப்பற்றி பிறகொரு நாள் சொன்னான். போலீஸ் கான்ஸ்டபிளாக இருக்கிறாள். அப்பா போலீஸ், அவர் இறந்தப்பிறகு அவரது போலீஸ் வேலையை இவள் வாங்கிக்கொண்டாள். வீட்டில் அம்மா அப்ரானி. மாமாதான் எல்லாமும். ஏற்கனவே ஒரு கல்யானம் நிச்சயம் ஆகி, கல்யாணத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் காணாமல் போய்விட்டாளாம். நேப்பால் வரை தனியாக ரயிலில் பயணித்துவிட்டு திரும்ப வந்துவிட்டாலாம்.

காயத்ரி அர்ஜுனிடம், “நீ நல்ல ஃப்ரெண்டுன்னு தெரியும், ஆனா ஹஸ்பண்ட் மெட்டீரியலான்னு தெரியல, வேணும்னா ஒரு ரெண்டு மாசம் லிவிங்’ல இருந்து பாக்கலாமா?” என்று கேட்டிருக்கிறாள். இதை நானும் அர்ஜுனும் தீவிரமாக ஆராய்ந்து கொண்டிருந்தோம். ஹஸ்பண்ட் மெட்டீரியல்னா என்ன? எத மீன் பண்றா? காலைல எழுந்திரிச்சு பாத்தரமெல்லாம் வெளக்கி வைக்கனுமா? சலுப்பா இருக்குன்னு சொன்னா சமைச்சு தரனுமா? இல்ல, என்ன சொதப்பு சொதப்புனாலும் சூடு சொரனலாம் வராம கோவப்படாம இருக்கனுமா? ஒன்னும் புரியலையே.

எனக்கு தெரிஞ்சி அவ யாரையோ பாத்து நல்லா பயந்துருக்கா. கல்யாணம் பண்ணா இவ்ளோ அவஸ்தப்படனும்னு அவ மனசுல இருக்கு. அதனாலதான் உன்ன நல்ல ஃபிரண்டா தெரிஞ்சிருந்தும் நீயும் நாளைக்கு கல்யாணம் ஆனப்பிறகு காட்டுமிராண்டியா மாறிடுவியோனு பயப்படுறா. இந்த சொசைட்டீல நிறைய சைக்கோங்க இருக்கு, தாலி கட்ற வரைக்கும் நைஸ் டு பி பர்ஸனா நடந்துக்குவானுங்க, ஒன்ஸ் தாலிகட்டிட்டா போதும், இஷ்டத்துக்கு போட்டு ஹரஸ் பண்ணுவானுங்க. அப்டியும் இருக்கானுங்க. இது எந்த சைக்கோ நல்ல சைக்கோன்னு கண்டுபிடிக்கிறது ஒன்னும் அவ்வளவு ஈசியில்ல. காயத்ரி உன்கிட்ட ஓபன்னா கேட்டுட்டா. 

சொல்லு அவகிட்ட, “கல்யாணம் பண்ணினா எப்டியும் காலத்துக்கும் சண்ட போட்டுதான் ஆகனும். யார்கூட சண்ட போடப்போறங்கிறதுதான் நீ ச்சூஸ் பண்ண வேண்டியது. யார்கிட்ட சண்டப்போட்டாலும், மண்ணிப்பு கேட்டோ, இல்ல மண்ணிச்சோ, மறுபடி சமாதானம் ஆகி அடுத்த கணமோ, அடுத்த நாளோ இயல்பா பேசி சிரிச்சி வாழ்க்கைய வாழமுடியனும். அப்டி யார்கிட்ட தோனுதோ அவங்களையே கட்டிக்க சொல்லு”னு சொல்லிட்டேன்.

காயத்ரியே ஒத்துக்கொண்டாலும், அவளது வீட்டில் எப்படி பேசி சம்மதம்வாங்குவது என்று அர்ஜுனுக்கு ஒரே யோசனை. கண்டிப்பாக காதல் திருமணம் என்றால் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்றான். ஏன் என்றேன். ஏற்கன்வே ஒரு கல்யாணத்த நிறுத்தி எங்க மானத்த வாங்கின. இப்ப லவ் பண்ணி வேற அசிங்கப்படுத்துறியா என்று சண்டைக்கு வருவார்கள்.

நீ காயத்ரியையே கல்யாணம் பண்ணிக்கு. நான்சிய கட்டிக்கிட்டு உன்னால உன் இயல்புக்கு மாறா வாழமுடியாது. காயத்ரிக்கு சில மனக்குழப்பம்தான் இருக்கு, நம்ம வீட்டுக்கு கூப்டுட்டு வா, நானும் செளமியாவும் பேசுறோம். அவதான் உனக்கு செட் ஆவா. அவ ஃபோட்டோ காட்டு பாக்கலாம். அர்ஜுன் அவனது ஃபோனில் இருந்து ஓரிரு ஃபோட்டோவைக் காட்டினான். லட்சனமான முகம். உனக்கு காயத்ரியா நான்சியானுலாம் குழம்ப வேண்டாம். ஒரே முடிவா காயத்ரிய கல்யாணம் பண்ற வழிய பாரு.

காட்சி 5:

ஒரு வழியாக வீட்டுக்கு வந்துவிட்டேன். செளமியாவிடம் அர்ஜுனுடனான பேச்சுகளின் சுருக்கத்தை சொல்லிக்கொண்டிருந்தேன். 

அவள் குறுக்கிட்டு, “புங்கவாடில, பூங்கொடி மவ காவ்யா சூசைட் பண்ணிக்கிட்டாளாம்.” 

எனக்கு ஒரு நிமிடம் யாரென கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. 

சற்று நினைவுகளை திரட்டிக்கொண்டு, “யாரு?”

செளமியா, “பூங்கொடி மொவப்பா, காவியா, நீ கூட பூங்கொடி மவளா நீஈயி.. னு கிண்டல் பண்ணுவியே”

நான்,”ஆமா காவியா? அவளா அப்டி பண்ணா?”

செளமியா, “ஆமாம் எதோ லவ் மேட்டராம், வீட்ல தெரிஞ்சிரிச்சி போல, வேற மாப்ள பாத்து கல்யாணம் தேதி குறிச்சிட்டாங்க. அதான் சூசைட் பண்ணிக்கிட்ட”

காவியா காதலிக்கும் வயதுக்கு வளர்ந்துவிட்டாள் என்பது எனது முதல் ஆச்சர்யம். ஆனால், அந்த ஆச்சர்யத்தை நான் அடைவதற்குள் அவளுக்கு தற்கொலை செய்துகொள்ளவும் தெரியும் என்பது பெரும் அதிர்ச்சி. 

சின்ன பொண்ணுதான் அவ. பதினாறு இல்ல பதினெட்டு வயசுதான் இருக்கும்.

வீட்டுல என் தங்கச்சி சபியிஷா படுத்திருந்தா, அவள எழுப்பி என்ன ஏதுன்னு விசாரிச்சிட்டு இருந்தேன். சபியின் சிநேகிதிதான் காவியா. லவ் பண்ணினது அஜித்னு ஒரு பையன. முன்னாடி வீடாம். டிப்ளமோ படிச்சிட்டு சென்னைல வேலபாக்றானாம். எங்க ஊர்ல பொறந்துட்டு தெள்ளவாரி ஆகாம படிச்சிட்டு வேலைக்கு போறதுலாம் ஒரு பெரிய சவால். அந்தப்பையன் படிச்சிட்டு வேலைக்கு போறதே எனக்கு பெருசாதான் தெரிஞ்சிது. காவியாவோட அம்மா பூங்கொடிதான், “அவனதான் கட்டிகுவன்னா நீ செத்து ஒழிடி”னு சொல்லிருச்சாம். அவ கொஞ்ச நாளாவே யார்கிட்டயும் பேசுறதே இல்லையாம். அவங்க அப்பா செல்வம் வண்டிக்கு போயிருந்தாராம். அவர் வர வரைக்கும் காத்திருந்து, அவர பாத்துட்டு, வீட்ல யாரும் இல்லாத சமையம் அம்மா பூங்கொடியோட சேலைல தூக்கு போட்டுகிட்டாளாம்.

எல்லாரும் பூங்கொடிய திட்டினாங்க, செல்வம் உட்பட சிலர் அடிச்சாங்க. ஆனா, போஸ் மாடம் பண்ண விடாம, ப்ளஸ் டூவுல மார்க்கம்மி அதனால புள்ள சூசைட் பண்ணிக்கிச்சினு விசியத்த மூடி மறச்சிட்டாங்களாம். மார்க் எவ்வளவுன்னு கேட்டேன். ஐநூறுக்கு முன்னூத்தி தொன்னூத்தி ஏழுன்னா சபி. புங்கவாடி போலாமா சபின்னு கேட்டேன். இல்லண்ணா, அப்பவே அவள எடுத்துட்டாங்கண்ணா என்றாள்.

மனசு கேட்காமல், அவளைப்பற்றியும், ஆண் பெண் உறவுகளில் உள்ள சிக்கல்களைப்பற்றியும், குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் செய்யும் குற்றங்கள் பற்றியும், ஜாதி, பணம், எல்லாம் எப்படி எல்லாத்தையும் பாதிக்கிறது என்று என்னென்னமோ பேசினோம். இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு செளமியாவும் சபியும் தூங்கச் சென்றார்கள்.

நான் ஹெட்போன் மாட்டிக்கொண்டு, நெட்ஃபிலிக்ஸில் ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ் போட்டுவிட்டு, கிச்சன் சிங்க்கில் குதித்து தற்கொலை செய்துக்கொண்டிருந்த பாத்திரங்களை கழுவ ஆரம்பித்தேன்.

-சூர்யா வாசு // 27-ஜூன்-2022

காதல், மேட்டர் மற்றும் தமிழ் சினிமா

சினிமாவுல சொல்ற நிறைய விசியங்கள் முகம் சுளிக்கிற மாதிரிதான் இருக்கு. ஆண்-பெண் உறவுகளில் அது சொல்லவரும் கருத்து/நியாயம் என்பது பலவாறானது. அது அந்தந்த சினிமாக்காரர்களின் இலக்கணம், விருப்பம், ஆசை, நிராசை, கற்பனை இப்டிலாம் வச்சிக்கலாம் ரசிக்கலாம் தவிற, அது மக்களின் வாழ்க்கைக்கான நெறிகள் இல்லை. ஆனால் மக்கள் அவ்வளவு தெளிவா என்ன?


இப்போ, கல்யாணத்துக்கு முன்னாடி கற்பமாறதுதான் கான்சப்ட்.

லவ்’ங்கிற கான்செப்ட்ட ஓவர்ரேட் பண்ணி பண்ணி ரொமான்டிசைஸ் பண்ணி பண்ணி லவ்வுன்னா என்னன்னே தெரியாம நானும் லவ் பண்றேன்னு ஏதேதோ பண்ணிட்டு இருக்காங்க. (இருந்தோம், இருக்கிறோம், இன்னும் பலனூறு ஆண்டுகளுக்கு இருப்போம்.) 

சென்ஸிடிவ் விசியத்த சென்ஸிடிவா கையாளனும். அதுதான் சரி. அத வச்சி காமெடி பண்றது, நார்மலைஸ் பண்றது ரியாலிட்டிக்கு செட் ஆகாது. இவை பெரும்பாலும் வாழ்க்கையை கடினமாக்கும் விடயங்கள். ஒவ்வொன்றாக இதை வகைப்பிரிக்க முயற்சிக்கிறேன். நூறு சதவீதம் என்னால் இந்த சிக்கல்களை வகைப்பிரிக்க முடியாதுதான், இருந்தாலும் பரவால முயற்சிக்கிறேன்.

ஒரு ஆர்டராக வருவோம்.

  • புடிச்சிருக்கனும்
  • ப்ரொப்போஸ் பண்ணனும்
  • ஒன் சைட், டூ சைட் ஆகனும்
  • வீட்ல சொல்லனும், போராடி சம்மதிக்க வைக்கனும்
  • கல்யாணம்
  • ஃபஸ்ட் நைட் (90ஸ் கிட்ஸ் அப்டிதான் சொல்லுவோம். 2K கிட்ஸ்’கு மேட்டர்னு நெனைக்கிறேன்)
  • ப்ரெக்னெண்ட்
  • குழந்தை
  • அப்றம் ஸ்கூல் பீஸ் கட்ட போராடனும்.

இது யதார்த்த லவ் மேரேஜ் பண்ணவங்க லைப்ல நடக்கிற சம்பவங்கள். 

இதில் கல்யாணத்துக்கு முன்னாடி ஃபஸ்ட் நைட்/மேட்டர் வருதுனா அதுதான் ஆண் வர்க்கத்துக்கே உரித்தான லட்சியக் கனவு. அதற்காகவே ஏங்கித்தவிக்கும் வாலிபர்கள் இல்லாத பள்ளி, கல்லூரி, அலுவலகமே இல்லை.

அப்படி நடக்கும்போது மேட்டரின் போது இருந்த அதே காதலிதான் கல்யாணத்தின்போதும் இருக்க வேண்டும் என்பதெல்லாம் ஆண்களுக்கு கட்டாயம் இல்லை. ஆனால், இதை திரையில் கொண்டு வந்து நார்மலைஸ் ஆக்குவது ஆபத்து. ஆல்ரெடி மேட்டர்ங்கிறது அங்க இங்கன்னு நார்மலைஸ் ஆகிட்டு இருக்கு.

கல்யாணத்துக்கு முன்னாடி ப்ரெக்னெண்ட் ஆகுறதுதான் ட்விஸ்ட்டு. அதுக்கு முன்னாடி மேல சொன்ன 1 to 9 ஆர்டர்ல, சினிமா என்னவெல்லாம் கலேபரம் பண்ணிவச்சிருக்குன்னு ஒரு ரீவைண்ட் பண்ணி பாக்கலாம்.

கான்செப்ட் 1

காதல் – கல்யாணம் – சுபம். 

ஒரு பையனுக்கு ஒரு பொண்ண புடிச்சிபோச்சின்னா அவளையே கல்யாணம் பண்ணிகிட்டா போதும் அவங்க வாழ்க்கைல ஜெயிச்சுருவாங்க. இதுல முக்கியமா கீழ் ஜாதி மேல் ஜாதி கலக்கனும், இல்லன்னா கிக் இருக்காது. தொரத்தி தொரத்தி அந்த பையன் ‘நீ என்னத்தான் லவ் பண்ணனும்’னு டார்ச்சர் பண்ணி, ‘ஆமா நான் உன்னதான் லவ் பண்றேன்’னு அந்த பொண்ணே சொல்லிறனும். பல வருடங்களா மொத்த தமிழ் சினிமாவும் இதுதான். இப்பவும் இது தொடருது. இந்த மண்டையனுக்கு லவ் வந்துட்டா அந்தப் பொண்ணுக்கும் இவன் மேல லவ் வந்தே ஆகனும். உன் லவ் ட்ரூ லவ்தான் இல்லங்குல, ஆனா உனக்கு புடிச்சிருக்குன்னா அவங்களுக்கும் புடிச்சே ஆகனுங்கிறது ஒருவிதமான சைக்கோத்தனத்துல வரலையா? ஸ்டாக்கிங்-க்கும் லவ்வுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களிடம் சினிமா மாட்டுனா இதான் கதி.

எ.கா. காதலுக்கு மரியாதை, சிவாஜி, ஆடுகளம், இத்யாதி இத்யாதி, மெளனராகம்.

கான்செப்ட் 2

முதல் காதல் – தோல்வி – ரெண்டாவது காதல் – கல்யாணம் – சுபம்.

இது கொஞ்சம் யதார்த்தம், சில உஷாரான பொண்ணுங்க என்னதான் தொரத்தி தொரத்தி சைக்கோத்தனம் பண்ணினாலும் ஏமாறமாட்டாங்க. போடா டோமருன்னுட்டு தப்பிச்சு போயிடுவாங்க. (சினிமால இத ப்ரேக் அப்னு சொன்னா நல்லாருக்காதுன்னு, கதைப்படி முதல் காதிலி செத்துட்டான்னு ஒரே போடா போட்டுருவாங்க) ஆனா அதே பைத்தியக்காரத்தனம் சில பொண்ணுங்களுக்கு புடிச்சு போயிருக்கும். ஆமாம். 

எ.கா. வாலி, வாரணம் ஆயிரம், சில்லுன்னு ஒரு காதல், ராஜா ராணி, 7ஜி ரெயின்போ காலனி.

கான்செப்ட் 3

நிறைய காதல் – நிறைய தோல்வி – கடசியா ஒரு கல்யாணம் – சுபம்.

இத விளக்க தேவையில்லன்னு நினைக்கிறேன். கிடைக்கிற வரைக்கும் அலைய வேண்டியதுதான். பாக்குற எடத்துல எல்லாம் அப்ளிக்கேசன் போட்டறனும்.

எ.கா. ஆட்டோகிராஃப், ப்ரேமம், அட்டக்கத்தி.

இதுக்கு அடுத்த ஸ்டேஜ் மேட்டர். என்ன மாயமோ தெரியல தமிழ் சினிமால கல்யாணத்துக்கு முன்னாடி மேட்டர் பண்றதெல்லாம் ok cool / casual / not a problem / heavenly / so what? / they need it னு glorify பண்ற காலகட்டம் சீக்கிரமா முடிஞ்சிரிச்சி. அதிக டைம் எடுத்தக்கல.

கான்செப்ட் 4

காதல் – மேட்டர் – ப்ரேக்கப் – வேற ஒருத்தனோட கல்யாணம் – ஹீரோக்கும் வேற ஒரு புது லவ்.

எ.கா. வின்னைத்தாண்டி வருவாயா, த்ரிஷா இல்லனா நயன்தாரா.

கான்செப்ட் 5

கல்யாணம் – குழந்தை – டிவோர்ஸ் – ரெண்டாவது காதல்

எ.கா. என்னை அறிந்தால், ரிதம், வேட்டையாடு விளையாடு, 

கொஞ்ச காலத்துக்கு முன்னாடி கல்யாணம் ஆன கொஞ்ச வருசத்துல தன் கனவன் இறந்துட்டா, ரெண்டாவது கல்யாணம் பண்றதுன்னா அந்தப் பொண்ணுக்கே தப்புன்னு தோணும். அந்த அளவுக்கு சமூகம் போதிச்சு வச்சிருக்கும். இது வாழ்க்கைய இன்னும் கடினமாக்குறது. ரெண்டாவது கல்யாணம் எனும்போது, இது சரிதான் யார் என்ன சொன்னாலும் தன் நலனுக்காகவும் தன் குழந்தையின் நலனுக்காகவும் சில சமூக கட்டுபாடுகளை தாண்டி வந்துதான் கல்யாணம் செய்வார்கள். அது வரவேற்கத் தக்கது. வாழ்க்கை வாழ்வதற்கே. சமூகத்தை மனம் கோணாமல் வைத்து அழகு பார்ப்பதற்கு அல்ல.

திருமணத்திற்கு பிறகான காதலை பதிவு செய்த படங்கள் என்பது மிகச்சொற்பம். இருந்தா சொல்லுங்க நான் தெரிஞ்சிக்கிறேன். மிகைப்படுத்தப் படாத காதலை, யதார்த்த காதலை பதிவு செய்தப் படங்களுள் ஒன்று அட்டக்கத்தி. பசங்க அப்டிதான் லவ் பண்ணுவானுங்க. ஒன்னு போச்சினா இன்னொன்னு. 96 காதல்லாம் ரியாலிட்டில கோடில ஒன்னுதான். அதுவும் பைத்தியக்காரத் தனமாத்தான் தெரியுது எனக்கு. வேணும்னே கல்யாணம் பண்ணிக்காம இருந்துகிட்டு ஜானு மாதிரி யதார்த்த பொண்ணுக்கும் ஒரு கில்ட் ஃபீலிங் ஏற்படுத்த முயற்சிக்கிறது எவ்ளோ சைக்கோத்தனம்? அந்த கில்ட் போக அவ என்ன பண்ணனும். 96 படத்த பாத்துட்டு, கேரலாவுல நடந்த ஒரு ஸ்கூல் கெட்டுகெதர்ல ஒருவரது மனைவி தன் முன்னால் காதலனுடன் ஓடிப்போனதுதான் ரியாலிட்டி.

மேட்டர் லவ்வர் கூட மட்டுமா? இல்ல ஃபிரண்டஸ் வித் பெனிஃபிட்டா, மேட்டர் பண்ணிட்டா அந்த நபரையேத்தான் கல்யாணம் பண்ணிக்குவாங்களானுலாம் கேக்காதீங்க. பதில் இல்லை. பதில் இருந்தாலும் அது சரியா தவறா என்பதெல்லம் அந்தந்த சம்பந்தப்பட்ட நபர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்கிறார்களா இல்லை காயப்படுத்திக் கொள்கிறார்களா என்பதே தீர்மானிக்கும். 

சில டாக்ஸிக் நபர்களிடம் இருந்து உறவுகளை முறித்துக் கொண்டால் அது சரியே. அது திருமணமே ஆகி மூன்று குழந்தைகள் இருந்தாலும் சரி. நம் வீக்நெஸ்ஸை தெரிந்துக் கொண்டு, நம்மை எமோஷ்னலாக துண்புறுத்தும் ட்ரிக்கர் செய்யும் எவரையும் நம் வாழ்வில் இருந்து தூக்கி எறிவதே சரி.

ஒரே ஒரு படம் வந்துச்சு ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’னு அதுலையும் ஏகப்பட்ட நாராசமான விசியங்கள 18+ ஆ இல்ல அடல்ட் காமெடியா இல்ல என்ன எழவுன்னே வகைப்படுத்த முடியாத அளவுக்கு இருக்கும். நான் ஒரு விர்ஜின் பையன், எனக்கு விர்ஜின் பொண்ணுதான் வேணும்னு ஜி.வி. கேக்க, விடிவி கனேஷ் ‘அதெல்லாம் டைநோசர் காலத்துலையே அழிஞ்சி போச்சிடா தம்பி’னு சொல்லுவார். என்ன சொல்ல வர்றாங்க? ஊர்ல இருக்குற பொண்ணுங்கெல்லம் தேவிடியான்னா? இதுக்கும் தேட்டர்ல விசில் பறந்துச்சு. அந்த தேட்டர்ல பெரும்பாலும் பசங்கதான், சில லவ்வர்ஸ் கப்பில்ஸ் வந்திருந்தாங்க. ஒரு குடும்பமும் வந்திருந்துச்சு. அதுவும் இண்டர்வல்ல கிளம்பி போகல. முழுபடமும் பாத்துட்டுதான் போனாங்க. டிக்கட் காசு வீணாகக்கூடாதுன்னு நெனச்சிருப்பாங்க போல. அந்தக்குடும்பத்துல பத்து வயசுப் பையனும் அடக்கம்.

அடுத்து அப்டி மேட்டர் பண்ணி ப்ரெக்னன்ட் ஆகுறது தனி கிக் ஆடியன்ஸுக்கு. இப்போ என்ன பண்ண போறாங்கன்னு இவங்களாலையே யூகிக்க முடியலனாதான் படம் சுவாரசியமா போச்சின்னு மைக்ல, fbல, டிவிட்டர்ல, யுடியுப்ல எல்லாம் சொல்லுவாங்க. இல்லன்னா படம் ஓடாது. லாபம் வராது. சினிமாக்காரங்க சிலர் கார் வீடு பங்களானு செட்டில் ஆக முடியாது.

அந்த சினிமால எதுலையும் கண்டிப்பா ஒரு மாத்திரைல கருவ கலைக்க மாட்டாங்க. அந்த பொண்ணுக்கு கலைக்க மனசு வராது. வராதா? இல்ல வரக்கூடாதா? இப்டிதான் கொஞ்ச காலம் தாலி செண்டிமெண்ட்ட தூக்கி புடிச்சிட்டு இருந்தாங்க. தாலி கட்டிட்டா அவந்தான் புருசன், அது இதுன்னு சொல்லிட்டு இருந்தாங்க. புதுப்பேட்ட தனுஷ் மாதிரி எவனாச்சும் தாலி கட்டினா யாரும் தாலிக்கட்டினவன் கூடத்தன வாழனும்னு பேசப்போறதில்ல. கழட்டி போட்டுட்டு போயிட்டே இருப்பாங்க.

அப்போ தாலி, இப்போ கற்பம். 

கலைக்கவே கூடாதாம். ஏன்னா அது ஒரு உயிராம். அவசரப்பட்டு பையனும் பொண்ணும் தப்பு பண்ணிட்டாங்க அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கனும் சரி. குழந்த பொறந்து நாலு அஞ்சு வருசம் கழிச்சி அந்தப் பையனுக்கு ஒரு சந்தேகம் வருது. சுயமாகவோ இல்லை சொல்லிக்கொடுத்தோ வரலாம். அந்த குழந்தைக்கு டி.என்.ஏ டெஸ்ட் எடுக்க சொல்வார்கள். அந்த பொண்ணோட வாழ்க்கையே சூனியமாகிவிடும். மெண்டல் ஹெல்த் எவ்வளவு முக்கியம் என்பது எல்லருக்கும் இங்கு புரிய வாய்ப்பில்லை. மெண்டல் ஹெல்த் குறைவாக உள்ளவர்களிடம் நெருக்கமாக வாழ்ந்தவர்களுக்குதான் அது புரியும். ஒரு உயிர காப்பாத்தறதா சொல்லி, அந்த பொண்ண காயப்படுத்தி ரணமாக்கி கடசில அந்த குழந்தையோட மனசுலையும் நஞ்சுதான் வளரும்.

ப்ரோ டாடி படத்துல வர மாதிரியோ அர்ஜுன் ரெட்டி படத்துல வர மாதிரியோ அவ்ளோ ஈசியா கற்பமான பொண்ண ஒத்துக்க மாட்டாங்க. குடும்பம் அக்கம் பக்கம்னு அவள சுத்தி இருக்கிற எல்லாரும் அவள பேசிப்பேசியே சாவடிச்சிருவாங்க. அவ ஒரு தேவிடியாத்தான்னு நிரூபிக்க அவள எப்பவும் ஒரு கூட்டம் மொச்சிகிட்டே இருக்கும். அவளோட நடை உடை பாவனை பாவாடை மயிர் மட்டைன்னு எல்லாத்தையும் நோட்டம் விடும். எதாவது ஒரு நேரத்துல, அவ கால் சந்துல வேற யாரு இருக்கா, இருந்தா, இருப்பானு தெரிஞ்சிறாதானு தேடுவாங்க. அவ்ளோ அரிப்பு இருக்கு அடுத்தவங்க அந்தரங்கத்த தெரிஞ்சிக்கிறதுல.

சிங்கிள் மதர்களிடம் கேட்டுப்பாருங்கள், நியாமான காரணத்திற்காகவே அவர்கள் தன் கனவனை பிரிந்து தானே குழந்தையை வளர்க்க முயற்சித்தாலும், அது அவ்வளவு சுலபமாக இருந்திராது. பல ஆண்கள் தீண்டத்துடிப்பார்கள். சின்ன கேப் கிடைக்காதா எனக் காத்திருப்பர்கள். நல்லவர்கள் போல் நயமாக பேசி மனதைக்கவர மெனக்கெடுவார்கள். இவர்கள் அனைவரும் நரிகள்தான். அசந்த நேரம் வாயில் போட்டு மென்று தின்று சற்று கசந்தவுடன் சக்கையாய் துப்பிவிட்டு போடி தேவிடியா என்று வாயாற வாழ்த்திவிட்டு அடுத்த தேவிடியா யாரென்று தேடிப் போய் விடுவார்கள். ஆண்களுக்கு வெரைட்டியாக அனுபவிப்பதில் அவ்வளவு அலாதி இன்பம்.

ப்ரோ டாடில வர மாதிரி ரெண்டு பேர் வீட்லையும் அப்பா அம்மாலாம் எங்கயுமே இருக்க மாட்டாங்க. நாப்பது ஐம்பது வயச நெருங்கிய எல்லாருக்கும் தெரியும் சமூகத்துல நமக்கான மரியாத’ங்கிறது எவ்வளவு முக்கியம்னு. தன் பையனோ பொண்ணோ இப்டி பண்ணிட்டான்னு வெளிய தெரிஞ்சா தன்ன புறக்கனிப்பாங்கன்னு இங்க எல்லாருக்கும் தெரியும். ப்ரோ டாடில வர மாதிரி எல்லா அப்பாக்களும் இங்க கோடீஸ்வர முதலாளிகள் கிடையாது. பலரும் தமிழ்நாட்டுல மிடில் கிலாஸ்தான். இந்த எலைட் குடும்பங்கள் ஒரு பிரச்சனையை கையாளும் விதத்தை அளவுகோலாக வைத்துக்கொண்டு சாதாரன மக்கள் தங்களின் பிரச்சனைகளை ஒரு இன்ச் கூட அனுக முடியாது.

ஆதலால் காதல் செய்வீர்தான் ரியாலிட்டியை பதிவு செய்த படம். அதுதான் யதார்த்தம். சபையில் ஒருவர் “ஏன்யா சும்மா பேசிட்டு இருக்கீங்க? பொண்ணோட ஒரு நைட்டு ரேட்டு எவ்ளோன்னு சொல்லுயா.” என்பார். எந்தத் தகப்பனும் கேட்கக் கூடாத வார்த்தைகள்.

இந்த சினிமாக்காரனுங்க இப்டிதான் எதையாவது டிரெண்ட் பண்ணிட்டு சமூகத்துல ஒரு மனநிலையை உருவாக்கிட்டு அடுத்த டிரெண்ட செட் பண்ண போயிருவானுங்க. பாவம் இந்த மக்கள்தான் அந்த டிரெண்டை தங்களின் அன்றாட வாழ்க்கையில் ஃபாலோ பண்ண ட்ரை பண்ணி செத்துகிட்டு இருக்காங்க. நல்லத சொல்லவும் இங்க படங்கள் இருக்கு. ஆனா சொற்பம். பேசப்படாத பல விசியங்கள பேசி ஒரு தீர்வு கொண்டு வரனும், அதற்கு கலை ஒரு மிகப்பெரிய ஆயுதம். அதை திருத்தமா பயன்படுத்தனும். இல்லன்னா அது திசையறியாமல் எல்லாரையும்தான் சிதைக்கும். முக்கியமா சினிமாவ பாத்து இதுதான் உலகம்னு நினைக்கிற வளரும் தலைமுறையினர ரொம்ப பாதிக்கும்.

இங்க யார் என்ன சொல்லனும்ங்கிற வரைமுறைய வகுக்குறது மிகப்பெரிய சிரமம். பேச்சுரிமை அனைவருக்கும் உண்டு. தெரியுதோ இல்லையோ வாய்க்கு வந்தத பேசிவச்சிட்டும் தோன்றத எல்லாம் படமா எடுத்துவச்சிட்டும் போயிருவாங்க. அது நன்மையா தீமையானு தெரியாம பரவசத்துல எடுத்து வாழ்க்கைல பொறுத்திபாத்துட்டு, பின்னாடி அவதிபடுறது என்னமோ சாதாரண மக்கள்தான்.

ஆகையால், “எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும்”ங்கிறத அடுத்த தலைமுறைக்கு நம் வாழ்வின் வழியாக வாழ்ந்து காட்டுவது நமது கடமை. நம் கடமை என்றென்றும் தவறேல். கலையை கலங்கமில்லாமல் உருவாக்கவும் உள்வாங்கவும் நல்லறிவுடன் முனைவோம்.

#brodaddymovie  #bachelormovie  #arjunreddymovie  #மா shortfilm #ஆதலால்_காதல்_செய்வீர்

-சூர்யா வாசு

-26-06-2022 11.20 am

ஆண் பெண் ஆற்றல்

தேடிக் களைக்கும் இம்மனம்.
கூடிக் களைக்கும் இவ்வுடல்.


மனம். உடல். இவ்விரண்டு தளங்களிலும் ஒரு ஆணின் வாழ்க்கை முழுவதும் சோர்வு தொடர்ந்தாலும், அவனின் ஆற்றலை கையாளும் சாவி என்றும் பெண்ணிடம்தான் பொதிந்துள்ளது.

ஆணுடைய ரத்தத்தில் உள்ள ஆற்றலை வேகப்படுத்த பெண்ணால் மட்டுமே முடியும். களைப்பில் வரும் உறக்கமே உடலின் முழு அமைதி. அமைதி இல்லாத மனம் நூலற்ற பட்டம்போல் அலைந்து திரியும். மனமும் உடலும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் அல்லவா?

செலவழிக்காத ஆற்றல் திசையறியாமல் திக்குமுக்காடி கிடைத்த இடத்தில் வெடித்துச் சிதறும். அதன் வடிவம் கோபமாக இருக்கலாம், கண்ணில் படும் பெண்களிடம் வழிவதாக, அளவுக்கு மீறி உழைப்பதாக, மது குடிப்பதாக, ஆங்காரமாய் கத்துவதாக, என எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.

ஆண் அத்து மீறும்போது, அவனது வீட்டில் இருக்கும் பெண்களும் அவனை கையாள தவறிவிட்டார்கள் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.


வீட்டில் சமைக்காத போது ஹோட்டலில் சாப்பிட்டுக் கொள்வார்கள். ஹோட்டல் போக வழியோ வசதியோ தைரியமோ இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்? கௌரவம் பார்க்காதவர்கள் ரோட்டில் கையேந்தி பிச்சை எடுப்பார்கள். பசி தாங்காதவர்கள் இறுதியில் திருடுவார்கள். மாணத்திற்கும் பயந்து பசியையும் பொறுக்க முடியாதவர்கள் எச்சில் விழுங்கி குப்புற படுத்து உறங்குவது போல் பாசாங்கு செய்வார்கள். யாரும் பட்டினியோடு உறங்க மாட்டார்கள்.


தன் வீட்டு வாசலில் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரர்களின் மூஞ்சில் எச்சில் துப்பும்முன், தன் வீட்டில் நுழைய முயலும் திருடனின் கண்ணில் மிளகாய் தூவும்முன், தன் வீட்டு ஆண் பிச்சை எடுக்கிறனா திருடுகிறானா என்று பெண்ணும் யோசித்துப் பார்க்க வேண்டும். தன் வீட்டை எத்தனை பிச்சைக்காரர்கள் திருடர்கள் குறிவைத்து காத்திருக்கின்றனர் என்று ஒவ்வொரு ஆணும் யோசித்துப் பார்க்க வேண்டும்.

எதிர் பாலின ஈர்ப்பு என்பது டி என் ஏ வில் உள்ள சமாச்சாரங்களே தவிர, குணம் சார்ந்த விடயம் அல்ல. நல்லவன் கெட்டவன் குமரன் கிழவன் வீரன் கோழை ஞானி முட்டாள் என உடல் கொண்ட அனைவருக்கும் எதிர் பாலின ஈர்ப்புணர்வு என்பதுண்டு. அதை பதின்ம வயதுகளில் துளிர்விடும் போது அடக்கி வைக்க முற்படுவது வன்மம் கடந்தது. அவ்வாற்றலை முறையாகக் கையாள கற்றுத்தர வேண்டும்.


வயிற்றின் பசிக்கு ஊண் உண்பது போல,
உடலின் பசிக்கு ஊடல் கொள்வது இன்றியமையாதது.

எல்லோருக்கும் இக்கரைக்கு அக்கரை பச்சைதான். அக்கரையில் இருப்பவர்களின் கண்களில் பாருங்கள் இக்கரை எவ்வளவு பச்சை என்று தெரியும்.


உயிரினங்கள் அனைத்திலும் ஆண் இனமே அழகு பொருந்தியதாக இருக்கிறது. அழகு காரணமாகவே பெண்களை கவர்ந்து ஈர்க்கின்றன. மனித இனத்தில் மட்டும் பெண் இனம் அழகு என்பதன் வரையறையை தனதாக்கிக் கொண்டது. சிந்தியுங்கள். ஆணுக்கும் அழகு கட்டுபாடு என எல்லாம் உண்டு. பெண்ணுக்கும் அறிவு அத்துமீறல் என எல்லாமும் உண்டு.


பசி வந்தால் பத்தும் பறந்து போகும். இதுவும் நம் உடல் நித்தம் கோறும் பசிதான்.

ஆண்கள், நாக்கை தொங்க போடாதீர்கள். வாயிலும் வயிற்றிலும் குப்பையை கொட்டாதீர்கள். பேரழகு கொள்ளுங்கள். துர்நாற்றமில்லாத மேனி பேணுங்கள். கடப்போர் கடை கண்ணின் எல்லையை நீட்டுங்கள்.


பெண்கள், அழகுபோல் அறிவையும் மெருகேற்றுங்கள். வீட்டு ஆண்களை முந்தானையில் முடியுங்கள். சொக்கிக்கிரங்கி சொர்க்கம் அழைத்துச் செல்லுங்கள். குடும்பம் குதூகலித்தால் வாழ்க்கை வளம் பெரும்.


ஊடலை இன்னும் பூடகமாக்காதீர்கள். காதலும் ஊடலும் சொல் வேறு செயல் ஒன்றல்லவா!

– சூர்யா வாசு
21.05.2020. 3.30 AM

நம் கல்வி முறை சரியானதா ? பகுதி 1

தப்புன்னு எடுத்த எடுப்புல பதிலளிப்பது பேச்சு சுவைக்கு தகும். அது மேலோட்டமான பதிலே தவிற தெளிவான இறுதியான பதிலல்ல. மெய்யறிவுடன் அனைத்து கோணங்களையும் ஆராய்வதுதான் சரியான புரிதலை ஏற்படுத்தும். அதோடு தீர்வையும் கொடுக்கும்.

1.jpg

சரி முதலில் இருந்து வருவோம். இயல்பிலேயே நாம் வீட்டில் இருந்துதான் முதல் பாதி அறிவைப் பெறுகிறோம். இரண்டாம் பாதியை வகுப்பறைகள் கற்பிக்கும். பிறகு இவ்விரண்டு கல்வியும் மாறி மாறி ஒன்றை ஒன்று பிரதிபலிக்கும், பாதிக்கும். வீட்டில் கற்றுக்கொள்வதை வகுப்பிலும், பள்ளியில் கற்றுக் கொள்வதை வீட்டிலும் வெளிப்படுத்திப் பார்ப்போம். இப்படித்தான் குழந்தைகள் நம் சமூகத்தில் மெல்ல மெல்ல கலக்கிறார்கள்.

மதிப்பெண் முறை

இதைப் புரிந்துகொள்ள, இந்தக் கல்வி முறையை மிக உயரத்திற்கு சென்று கழுகு பார்வையில் பாருங்கள். நாம் குழந்தைகளுக்கு மனிதர்களாய் வாழ கற்றுக் கொடுக்கிறோமா, இல்லை பணம் சம்பாரிக்கும் மிஷினை உருவாக்குகிறோமா என்று தெரியும்.

பணம் சம்பாதிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. பொருள் ஈட்ட வேண்டும் என்று சொல்கிறேன். இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் புரிந்துவிட்டால், பொருளாதாரம் பற்றிய விவரம் தெரிந்துவிடும்.

எல்லாருக்குமே தத்தம் பிள்ளைகள் ஊரறிந்த கம்பெனியின் ஆபிசில் ஏசியில் உட்கார்ந்துதான் வேலைப்பார்க்க வேண்டும் என்று ஆசை. இதற்காக பிள்ளைகள் இழப்பவை என்னென்ன என்று பட்டியலிடுங்கள்.முதலாவது அவர்கள் கேள்வி கேட்கவே மறக்கடிக்கப் பட்டிருப்பார்கள்.

குழந்தைகளின் சுபாவமே தெரியாததை கேள்வி கேட்டு தெரிந்து கொள்வதுதான். ஆனால் இந்த கல்வி முறை குழந்தைகளிடம் கேள்வி மேல் கேள்வியாக கேட்டு அதற்கு மதிப்பெண் வைத்து குழந்தைகளை தரம்பிரிக்கிறது.

ஒரு வகுப்பில் முப்பது குழந்தைகளில் மூன்று பேரை மட்டும் அறிவாளி என்று முத்திரை குத்தி மற்ற எல்லா குழந்தைகளின் மனத்திலும் தாழ்வு மனப்பான்மையை விதைக்கின்றன. அந்த மூன்று குழந்தைகள் தனக்கு எல்லாம் தெரிந்துவிட்டது என்ற மிதப்பில் அதன் பிறகு எந்தக் கேள்வியுமே கேட்பதில்லை. கேள்வி கேட்காமல் இருக்கும் இடம் தெரியாமல் இருக்கும் பிள்ளைகளை எல்லாரும் எவ்வளவு மெச்சிக் கொள்வார்கள் என்று சொல்ல வேண்டாம். மற்ற குழந்தைகள் நாம் முட்டாள் என்று நம்பி எந்த கேள்வியும் கேட்க தயங்கி வாயை மூடிக்கொள்கிறார்கள். அடிமை சமூகம் அமைய அங்குதான் அடிக்கல் நாட்டப்படுகிறது. தன்னைச்சுற்றி எது நடந்தாலும் அதற்கு எந்த ரியாக்ஷனும் கொடுக்காத ஒரு மலட்டு சமூகம் உருவாகிக் கொண்டேயிருக்கிறது. இது சரியான கல்வி முறை அன்று. ஒரு குழந்தை கேள்வி கேட்கவும் பதில் சொல்லவும் பழகி இருக்க வேண்டும்.

2

பதில்களுக்கு மதிப்பெண் அளிப்பது போல் கேள்விகளுக்கும் மதிப்பெண் அளிக்கும் வண்ணம் ஒரு கல்வி திட்டம் கொண்டு வந்தால், அந்த பிள்ளைகள் வளர்ந்து ஊடுருவும் சமூகத்தில் இருக்கும் அதிகார வர்க்கம் தினறிப்போகும். ஒவ்வொரு இன்னல்களுக்கும் கேள்வி கேட்க பழகிய சமூகத்திடம் எந்த முறைகேடுகளும் எளிதில் அரங்கேறிவிட முடியாது.

ஆக, அடிமை சமூகம் உருவாக வேண்டுமெனில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலை மட்டும் எழுதப் போராட வைக்கும் கல்வி முறையை விட்டுவிடாமல் இருக்க வேண்டும்.

எல்லாவற்றையும் கேள்விக்கு உட்படுத்தும் சமூகம் எவ்வளவு ஆக்கப்பூர்வமான முன்னேற்றங்களை அடையும் என்று யூகித்துப் பாருங்கள்.

வளர்ப்பு

உங்கள் குழந்தை எவ்வளவு பெரிய பள்ளியில் படித்தாலும் சரி, அடிப்படை விசியங்களில் அவனுக்கு அடிமை குணம் ஊட்டப்பட்டிருக்கும்.

அவர்கள் ஒருபோதும் நல்ல ஆன்மாவை உடைய மனிதர்களாய், மனசாட்சிக்கு அஞ்சும் மனிதர்களாய், தத்தம் தவறுகளை உணர்ந்து திருத்திக் கொள்ளும் மனிதர்களாய், சக மனிதர்களை மனிதத்துடன் நடத்தும் மனிதர்களாய், பகுத்தறிவு கொண்ட மணிதர்களாய், எதிர்கால தொலைநோக்கு பார்வை கொண்ட மணிதர்களாய், பொதுவுடமை போற்றும் மனிதர்களாய் வளர்வதே இல்லை. பணத்திற்கும் சம்பளத்திற்கும் பெரிய கம்பெனியில் வேலை என்ற மோகத்திலும்தான் ஆசைப்படுகிறார்கள். விளைவு ?

உங்கள் பிள்ளைகளை வளர்க்காதீர்கள். வளர உதவுங்கள். உட்கார்ந்த இடத்திலே வேலை செய்யும் வேலை மட்டும் நல்ல வேலை இல்லை. சமூக முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் எந்த வேலையும் நல்ல வேலைதான்.

  1. ஆண் பெண் உறவுகளை கையாளத்தெரியாமல் மிக மிக மோசமான விபரீதங்கள் எட்டும்.
  2. உறவினர்கள் அற்று போவார்கள். வேலை செய்யும் அலுவலகத்தில் உள்ள நண்பர்கள் ஒட்டியும் ஒட்டாமல் ஃபேமிலி பிரண்டஸ் ஆவார்கள்.

சரி இது மட்டுந்தான் அவலமா என்றால் இல்லை. உங்களின் பிள்ளை சொகுசான வாழ்க்கை வாழ்வது என்றால் நீங்கள் எப்படி கனவு கண்டு வைத்திருப்பீர்கள்?

  • அவன்/அவள் சிட்டியில் சொந்தமான பெரிய அப்பார்ட்மெண்டிலோ பீச் அவுசிலோ இருக்க வேண்டும்.
  • காலை எழுந்ததும் டீ காபி போட்டுதர ஒரு வேலை ஆள் இருக்க வேண்டும்.
  • ஆபிசுக்கு கிளம்பிய உடன் வேலைக் காரர்கள் டிப்பன் செய்து ரெடியாக வைத்திருக்க வேண்டும்.
  • சாப்பிட்டு முடித்ததும் அங்கேயே கைகழுவிவிட்டு எழுந்து காருக்கு செல்ல வேண்டும்.
  • காரை டிரைவர் துடைத்து வைத்திருந்து, இவர் வந்தவுடன் கதவைத் திறந்து காத்திருந்து, காரினுள் ஏறிய பின்னர் கதவை மெல்ல முடவேண்டும்.
  • காரில் செல்லும் போது தி ஹிந்த ஆங்கில நாளிதழ் படிக்க வேண்டும்.
  • வானுயர்ந்த பில்டிங்கின் முகப்பில் கார் நின்றவுடன் அங்கு காத்திருந்த பி.ஏ. கார் கதவுகளை திறந்துவிட வேண்டும்.

இப்படி எல்லாமே சினிமாவில் வரும் காட்சிகள். பின்னணி இசை கொடுத்து மிகைப்படுத்தப்பட்ட தினிப்பு ஆசைகள்.

Image result for creative images about education system

இப்படியாக மெல்ல மெல்ல அனைவரும் ராஜாவாக மந்திரியாக வாழ ஆசை படுகிறோம். ஆனால் அதற்கான தகுதியை வளர்த்துக் கொள்வதில் யாரும் ஆர்வம் காட்டுவதில்லை. சொகுசாக படித்து, சொகுசாக பரீட்சை எழுதி, சொகுசாக வேலை வாங்கி, சொகுசாக செட்டில் ஆகிவிட வேண்டும் என்று அனைவரும் ஓடுகிறோம்.

பையன் பேங்குல மேனேஜரா இருக்கான்னு சொல்லவே எவ்வளவு ஆனந்தமாய் இருக்கிறது? உண்மையில் வங்கிகள் சமூக முன்னேற்றத்திற்கு எப்படி பின்னடைவை ஏற்படுத்துகிறது என்பதை இந்த தற்சார்பு பொருளாதாரம் பக்கத்தில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

போட்டியும் படிப்பும்

இப்படியாக வைத்துக் கொள்வோம். ஒரு பெரிய மைதானத்தில் நூறு விளையாட்டுகள் நடைபெருகின்றன‌. ஒவ்வொரு விளையாட்டிலும் வெற்றிபெறும் முதல் மூன்று பேருக்கு பரிசுகள் வழங்கப்படும். நூற்றில் ஒரு விளையாட்டு படிப்பு. அதிலும் முதல் மூன்று பேருக்குதான் பரிசு கிடைக்கும். இருந்தும் அந்த விளையாட்டின் வியாபாரத்திற்காக கவர்ச்சிகரமான (அபாசமான அல்ல) பல விளம்பரங்களை பரப்பி படித்தால் மட்டுமே வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என நம்ப வைத்து சொற்ப உதாரணங்களைக் காட்டி வசியப்படுத்துகிறார்கள். ஏனைய விளையாட்டுகளிலும் பரிசுகள் உண்டு என்பதையே மக்கள் மறந்து விடுகிறார்கள்.

Related image

உங்களை ஒரு சுய பரிசோதனைக்கு உட்படுத்திப்பாருங்கள். நீங்கள் செய்யும் வேலை எத்தகையதாக வேண்டுமானாலும் இருக்கட்டும், அந்த வேலையை திருத்தமாக செய்ய நீங்கள் கடந்து வந்த காலமும் அதற்கு நீங்கள் கொடுத்த விலையும் தகுமானதா ? இல்லை வெறும் கல்வி வியாபாரத்திற்காக நீங்கள் உபயோகப்படுத்தப்பட்டீர்களா ? நீங்கள் செய்யும் வேலையை செய்ய நிச்சயமாக இளங்கலை முதுகலை என கல்லூரி படிப்பு மிகவும் அவசியமானதா ? அல்லது அந்தத் துறைசார்ந்த ஒரு வருட படிப்பு போதுமானதா ?

இயல்பிலேயே நாம் புதிய முயற்சிகளை எடுக்க பயமூட்டப்பட்டு வளர்க்கப்படுகிறோம். அதன் விளைவுதான் பி.இ., எம்.இ, படித்த இளைஞர்கள் ஐயாயிரத்திற்கும் ஆறாயிரத்திற்கும் வேலை கிடைத்தால் போதும் என்று போராடும் அவலம் ஏற்படுகிறது. முதலீடு செய்யவும் தொழிலில் லாபம் ஈட்டவும் யாரும் இங்கு வகுப்பெடுப்பது இல்லை. வரி குறித்த அடிப்படை புரிதலும் யாரும் சொல்லிக் கொடுப்பது இல்லை. சட்டம் குறித்த அறிவும் சட்டப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே வெளிச்சம்.

இருபது வயது வரை பல லட்சங்கள் செலவு செய்து படிக்கும் படிப்பிற்கும் நாம் செய்யும் வேலைக்கும் சம்மந்தம் இல்லாமல் இருப்பதை யாரும் இங்கு ஆச்சர்யமாய் பார்ப்பதாய் தெரியவில்லை. மாறாக எல்லாருக்கும் இதுதான் நடக்கிறது என்றால் நமக்கும் இது நடந்தால் பரவாயில்லை என்ற எண்ணமே மேலோங்குகிறது.

Related image

ஒன்பதாவது, பத்தாவது, பதினொன்றாவது, பனிரெண்டாவது பாடதிட்டத்தை கவனியுங்கள். தமிழ், ஆங்கிலம், கணக்கு, இயற்பியல், வேதியல், தாவரவியல், விலங்கியல், சமூக அறிவியல் என பட்டியல் இருக்கிறது. தொண்ணூறு விழுக்காடு மாணவர்கள் சயின்ஸ் குருப் இல்லையென்றால் கம்ப்யுட்டர் குருப். ஏனென்றால் நாம் ஆனால் டாக்டர் இல்லையேல் இஞ்சினியர். இத்தனையும் படித்த மாணவர்கள் இவற்றை என்றாவது தினசரி வாழ்க்கையில் பயன்படுத்தி இருக்கிறார்களா ? வாழ்கைக்கு முக்கியமான உணவும் அதை உற்பத்தி செய்யும் விவசாயத்தையும் மூன்றாம் தர தொழிலாக சித்தரித்தது யார் ? சமூக வாழ்க்கைக்கு முக்கியமான பொருளாதாரத்தை யார் எப்போது நமக்கு கற்றுக் கொடுக்க போகிறார்கள். அரசியல் குறித்த அறிவு மாணவர்களுக்கு தேவை இல்லை என்று யார் முடிவு செய்தது ? பட்ஜெட் குறித்தும் வரிகள் குறித்தும் யார் நமக்கு எடுத்து சொல்வது ? நாம் ஓவ்வருவரும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய விடம் இவைதான். ஆனால் நாமோ கணக்கு பாடத்தில் நூறு வாங்கவே போராட பழகியுள்ளோம்.  நூறில் நூறு பேருக்கும் உணவு, விவசாயம், பொருளாதாரம், அரசாங்க படிநிலை, local governance, சட்டம், குறித்த அறிவு தேவை அல்லவா? இவற்றை விடுத்து ஏன் மற்ற பாடங்களின் அடிப்படையை தாண்டி ஆழ படிக்க வேண்டும்? இந்த கேள்வியை கேட்டால், கணிதவியல் Research and Development போன்ற உயர்ந்த படிப்புகளுக்கு கணிதவியல் முக்கியம் போன்ற பதில்கள் வருகின்றன. மாணவர்களில் யார் யார் எந்த எந்த துறையில் சிறந்து வருவார்கள் என்று கண்டறிய தெரியாமல் எல்லாருக்கும் ஒரே பாடத்திட்டம் போட்டு, அதில் சிலரை மட்டும் வேலைக்கு எடுத்துக் கொள்வது. இது எவ்வளவு பெரிய அய்யோக்கியத்தனம் ?

வெறுமனே மக்கள்தொகையில் இருந்து வேலைக்கு தகுதியான ஆட்களை வடிகட்டும் ப்ராசஸ்தான் இந்த இருவது வருட படிப்பு என்று புரியும்போது வாழ்வின் பாதி முடிந்துவிடுகிறது. மீதி கேள்விக்குறியாகி விடுகிறது.

சரி நூறில் பத்து பேரை வேலைக்கு எடுத்துக் கொள்கிறார்கள், மற்றவர்களின் நிலைமை ? Collateral damage ? எல்லாவற்றிற்கும் அதிகாரவர்கத்தை குறை சொல்வதை நான் சரி என்று நம்பவில்லை. மிக எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் வேலை வேண்டும் என்று அரசாங்கத்திடம் ஐ.டி. நிறுவனங்களிடம் கை ஏந்தி நிற்பதை நிறுத்தி விட்டு, நம் ஊரின் முன்னேற்றத்திற்கு எந்த வகையில் நம்மால் பங்களிக்க முடியும் என்று சிந்தியுங்கள். நம் ஊர் முன்னேறும் நாமும் முன்னேறுவோம். படித்தால் தான் செட்டில்மென்ட் என்ற மாயை விடுங்கள். கற்றல் இருந்தால்தான் செட்டில்மென்ட். அரசியல்வாதிகள் சிறந்த உதாரணங்கள்.

எல்லா கால கட்டத்திலும் மக்களின் அன்றாட வாழ்கையை கடப்பதில் ஒரு இடைவெளி இருக்கும், அதை நிறப்பும் நிறுவனம் வெற்றி பெரும். உதாரணம் Flipkart, சக்தி மசாலா  போன்ற நிறுவனங்கள்.

போலி விளம்பரங்களில் இன்னும் எத்தனை நாள்தான் மயங்கிக் கிடக்க போகிறோமோ.

இரண்டு விரல்களை நீட்டி ஒன்றை தொடு என்று அதிகார வர்க்கம் நம்மிடம் கேட்கும் நேரத்தில் மீதியுள்ள எட்டு விரல்களை பற்றியும் யோசித்து முடிவெடுங்கள்.

கல்வி வியாபாரம் சரியா ?

இன்று பல இருபாலர் பள்ளிகளில் நீங்கள் பார்த்திருப்பீர்கள், ஆண் பிள்ளைகள் தனி வகுப்புகளிலும் பெண் பிள்ளைகள் தனி வகுப்பிலும் இருந்து படிக்கிறார்கள். ஏன் இந்த பிரிவினை ? எத்தனை நாள் இந்த பிரிவினை பெண் பிள்ளைகளை துர்சம்பவங்களில் இருந்து காப்பாற்றும் ?

அந்தந்த பள்ளி நிர்வாகம் தொல்லையின்றி பெண்பிள்ளைகளை பத்திரமாக வீட்டிற்கு அனுப்பத்தான் இந்த ஏற்பாடுகள். அதன் விளைவு கல்லூரிக்கு சென்றவுடன் அடக்கிவைத்த ஆசைகள் பீறிட்டு கொட்டும். காதல் என்ற பெயரில் ஏதோதோ செய்யத் துணியும். சில இடங்களில் கல்லூரிகளிலும் பிரித்து வைத்திருந்து நாண்கு வருடங்கழித்து அனுப்பி விடுகிறார்கள். வேலைக்கு செல்லும் இடத்திலோ திருமணத்திற்கு பின் ஆணும் பெண்ணும் பேசவே மாட்டார்களா ? அப்போது ஒருவர் மீது ஒருவர்க்கு ஈர்ப்பு ஏற்படாதா ? சிறு பிசகு ஏற்பட்டாலும் வல்லுணர்வு‍, பாலியல் தொல்லை என எப்பெரும் விபரீதங்கள் ஏற்படும்? இதெல்லாம் ஹார்மோன்களின் வெளிப்பாடு என்று எண்ண வேண்டாம். அது தவறு.

குழந்தைகளுக்கு முறையாக காமத்தையும், இனப்பெருக்கத்தின் முக்கியத்துவத்தையும் அறிமுகப்படுத்தாதது பெற்றோர் மற்றும் பள்ளியின் தவறு இல்லையா ?

உணர்வுகளை வழிபடுத்த கற்றுத்தருவதும் கல்விதான். வெறுமனே பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற பிள்ளைகளை தள்ளுவதெல்லாம் பள்ளி நிர்வாகத்தின் சுயநலம். வியாபாரத்தில் லாபம் ஈட்ட பிள்ளைகளை பலியாடாக ஆக்கிவிடுகிறார்கள்.

ஆணுக்கும் பெண்ணுக்கும் எதிர் பாலினத்தின் உடல்மீதிருக்கும் மாயையை உடைத்தெறியும் முக்கியமான பொறுப்பை யார்தான் ஏற்றுக்கொள்வது ? பள்ளி அல்லது கல்லூரி நிர்வாகிகளுக்கு இதெல்லாம் தெரியாமல் இல்லை. தவறு நடக்கும் என்று அவர்களுக்கு நன்கு தெரியும். அது தம் இடத்தில் நடக்காத வண்ணம் பார்த்துக் கொள்கிறார்கள். உண்மையில் மாணவர்கள் மீது அவர்களுக்கு அக்கரையே இல்லை. கல்வியை வியாபாரமாக்கியதின் விபரீதம் இதுதான். இது ஒரு பக்கம் இருக்கட்டும் வெறும் பத்துகிலோ புத்தகம் பிள்ளைகளின் வாழ்வை நிர்ணையித்து விடுமா ? அதைப் பெற்றோர்களும் நம்புவது எவ்வளவு பெரிய அறிவீனம் ?

Related image

(பகுதி 2ல் தொடரும்…)

மேலும் தங்களின் பொன்னான நேரத்தை ஒதுக்கி படித்தமைக்கு நன்றி எதுவும் கிடையாது. இவற்றை தீர ஆராய்ந்து நல்ல முறையில் செயல்படுத்துங்கள் சிலையே வைக்கிறேன்.

Image result for comment please

பின்னுட்டம் முக்கியம். உரையாடி அறியாமை களை.

Surya devan V —— 16.09.2018

வணிக சினிமா என்கிற வக்கிர சினிமா.

நகரங்களில் மசாஜ் சென்டர்கள் இருக்கும். பணம் பணம் என்று அலைபவர்கள் ஒரு கட்டத்தில் கால் அமுக்கிவிடக்கூட மனைவி மகள்களின் அன்பு கிடைக்காமலோ, உடல் உழைப்பற்று கிடப்பதால் வரும் சோர்வினாலோ ஒரு இளைப்பாறுதலுக்காக மசாஜ் சென்டர்கள் செல்வார்கள். அங்கு எண்ணை ஊற்றி உடலை நீவி விடுவார்கள். ஒருவாறு உடலின் இளைப்பு மனதிற்கும் ஒரு புத்துணர்வைக் கொடுக்கும்.

கிராமங்களில் பகல் பொழுதுகளில் வயல்களில் வேலை பார்த்துவிட்டு இரவில் டென்ட்டு கொட்டாக்களில் சிவாஜி எம்.ஜி.ஆர் படங்களைப் பார்த்து இளைப்பாறுவர். சில கண நேரம் வேறு ஒரு உலகத்துக்கு பயணித்துவிட்டு வந்த உணர்வு கிடைக்கும். மீண்டும் மறுநாள் மாலைப்பொழுதை நினைத்தபடியே பகல்நேர வயல் வேலைகள் எப்படி முடிந்தது என்றே தெறியாத அளவுக்கு அவர்களின் உள்ளம் புத்துணர்வு பெற்றிருக்கும்.

மசாஜ் சென்டர்களின் கொள்ளை லாபத்தை கண்டு வெறி கொண்டு புதிதாக பல மசாஜ் சென்டர்கள் திறக்கப்பட்டன. எதிர்பார்த்த அளவிற்கு லாபம் பெய்யவில்லை. காரணம் புதிதாக நூறு சென்டர்கள் தொடங்கிவிட்டபடியால் மக்கள் தொகையும் நூறு மடங்கு ஆகிவிடுமா என்ன ? அங்குதான் உதயமானது “ஃபுல் பாடி மசாஜ் வித் ஹாப்பி என்டிங்க்.” ஆரம்பத்தில் சற்று அபத்தமாகத்தான் இருந்தது. மெல்ல மெல்ல Complimentary ஆக இருந்தது. இப்போது Supplementary ஆக மாறிவிட்டது. வேலையின் பளு காரணமாக மசாஜிற்கு வருவோற் போக ஹாப்பி என்டிங்கின் சுகத்திற்காக வேலைக்கே போகாத உடல் சோர்வே இல்லாத பெரும் இளைஞர் கூட்டம் மாசாஜ் சென்டர்களின் முகவரியை தேடலானார்கள்.

சினிமாவின் முந்தைய வெர்சனான நாடகம் ஒரு கலை தான். எப்போது ஆட்டத்தைப் பார்த்து காசு போடும் வழக்கம் மாறி, எப்போது காசு கொடுத்து ஆட்டத்தைக் காண ஆரமித்தோமோ அப்போதே நாடகம் ஒரு வியாபாரம் ஆகி விட்டது. சினிமாவில் ஹீரோயினை காப்பாற்றனும், ஹீரோ ஜெயிக்கனும், வில்லன் தோற்கனும் போன்ற இலக்கணத்தை கடந்து ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் ரொமான்ஸ் ஸீன்கள், இடுப்புக் காட்சிகள், மார்புக்கு மத்தியில் தேளை ஊர விட்டு குத்தும் காட்சிகள், கற்பழிப்பு காட்சிகள், இரட்டை வசனங்கள், முதலிரவு காட்சிகள், கட்டில் கால்கள் ஆடும் காட்சிகள் என வளரந்து த்ரிஷா இல்லனா நயன்தாரா, ஹர ஹர மகாதேவகி, இருட்டு அறையில் மொரட்டு குத்து வாக உருவெடுத்து நிற்கிறது. கேட்டால் இது போன்ற படங்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதாக பேட்டி அளிக்கவும் கூச்சப்படாத ஒரு கூட்டம் சினிமா ஒரு என்டர்டெயின்மென்ட் மீடியம், porn hub இல்லை என்பதை மறந்துவிட்டு திரிகிறது. தியேட்டருக்கு வருபவர்கள் ஒரு அனுபவத்தோடு வீடு திரும்ப வேண்டும். அரிப்புடன் திரும்பி நினைத்து நினைத்து ஆர்காசம் அடையக்கூடாது.

டாக்குமெண்டரி போல எடுக்க சொல்லவில்லை. ஓகே கண்மணி, ஜோக்கர், போன்ற வக்கிரமற்ற பல படங்களை இருக்கின்றன. லாபத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்யும் இச்சமூகம், இன்ப போதைக்காக எதை வேண்டுமானாலும் ஆதரிக்கும் நிலைக்கு நகர்ந்து வருவதற்கு வக்கிரங்கள் நிறைந்த வணிக நோக்கமுள்ள படங்கள் திடமான அடிக்கல் நாட்டி வருகின்றன. இன்னும் சிந்திதீர்களானால், மனிதனென்பவன் ஒரு imitating animal, எதைப் பார்க்கிறானோ அதைத்தான் இமிடேட் செய்வான்‌. பகுத்தறிவு பெற்று இச்சமூகம் செழித்து வளரும் நாளைக் காண ஆவலுடன் பங்களித்து வரும் #உன்னைப்_போல்_ஒருவன்

Surya Vasu
-27.07.2018

கற்பழிப்பை தடுப்பது எப்படி?

இந்த கற்பழிப்பு சம்பவங்களை உடனடியாக நிறுத்துவது எப்படி? சட்டங்களை கடுமையாக்குதல், சமூக வலைத்தளங்களில் கண்ணீர்வடித்து கவிதை எழுதுதல், அந்த ரேபிஸ்ட்டை கண்டந்துண்டமாக வெட்டி வீச பரிந்துரைத்தல் என எல்லாமே ஓட்டை பானையில் உலை வைக்கும் யோசனைகள்தான். மீண்டும் மீண்டும் அது போன்ற அவலங்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கும். சிறு வயது முதலே வக்கிர எண்ணங்களை மனதில் நீருற்றி வளர்த்துவிட்டு, ஒருவன் இச்சமூக்தின் அழுக்கை பிரதிபலித்தவுடன் அவனை தூக்கிலிடுவது மெய்யறிவற்ற செயலாகும். அதற்காக அவனை விட்டுவிடச் சொல்லவில்லை. அவனை என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள். அதற்கு முன் இன்னொரு Rapist உருவாகாமல் இருக்க என்ன முயற்சி எடுத்தோம் என்பதை சிந்தியுங்கள்.

குற்ற சம்பவங்களை தடுத்து நிறுத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் எவ்வளவு செய்தாலும் குற்றங்கள் குறையாது. குற்றவாளிகள் குற்றத்திற்கான மாற்று வழியைதான் கண்டுபிடிப்பார்கள். பிறகு எப்படித்தான் குற்றங்களை நிறுத்துவது என்றால், மக்களுக்கு குற்றம் புரிவதற்கான தேவையை இல்லாமல் செய்வதே ஒரே வழி. அதுபோலவே கற்பழிப்பும். ஒருவனை கற்பழிக்க தூண்டியது எது என்று ஆராய்ந்து அவற்றை களைந்தால் மட்டுமே கற்பழிப்பு சம்பவங்களை விரைவில் நிறுத்த முடியும். (குறைந்தது ஒரு தலைமுறை காலமாவது தேவைப்படும்)

கற்பழிப்பை தடுக்க என்று தலைப்பு வைத்துவிட்டு ஏன் இவ்வளவு அளக்கிறேன் என்று நீங்கள் நினைக்கலாம், பெண்களை சக மனிதத்துடன் பார்க்கும் மனநிலைக்கு தடைகளாக இருக்கும் ஒவ்வொன்றையும் சுட்டிக்காட்டி அவற்றை சரிசெய்ய தீர்வையும் ஆராய்ந்தால் மட்டுமே பெண்களை போகப் பொருளாகப் பார்க்கும் எண்ணம் குறையும். குறைந்தபட்சம் அடுத்த தலைமுறைக்கு இந்த புரிதல்களை ஏற்படுத்தினாலே போதும் அவர்கள் தத்தம் வாழ்க்கையில் தகுந்த சூழ்நிலைகளில் சரியான முடிவுகளை எடுக்கவும் முன்னெடுப்புகளை மேற்கொள்ளவும் பெரிதும் உதவும்.

பெண்களை ஏன் பலப்படுத்த வேண்டும் ?

என்னதான் பெண் என்பவள் ஆண்களைக்காட்டிலும் அதிக வலியைத் தாங்கிக் கொள்ளக்கூடியவள் (மகப்பேறு மற்றும் மாதவிடாய் நேரங்களில் உள்ள வலியை சில வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது) என்றாலும், உடல் வலிமை இல்லாத ஒரே காரணத்தாலேயே பல இடங்களில் தன்னை பகுதியாகவோ முழுவதுமாகவோ இழக்க நேரிடுகிறாள். அவளை பலசாலியாக்குவதே சில ஆண் மிருகங்களிடம் இருந்து அவளை தற்காத்துக் கொள்ள உதவும். உதாரணமாக விளையாட்டில் பங்குபெறும் பெண்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்களின் நடையே ஆண்களின் நடையைப் போன்று கம்பீரமாக இருக்கும்.

இப்படிப்பட்ட பெண் தனியாக வந்தாலும் நான்கு ஆண்கள் இருப்பினும் கை வைக்க சற்று யோசிப்பார்கள். சுற்றி வளைத்து பின்னாலிருந்து இறுக்கி பிடித்துக் கொண்டாலும் திமிறி கொண்டு விடுபடுவாள். ஒங்கி ஒரு அறை விட்டாலும், மயங்கி கீழே விழாமல் அதே வேகத்தில் பதிலறை விடுவாள். எதிர்க்கும் ஆணுக்கு பயம் வரும். பெண் தப்பிக்க வாய்ப்பிருக்கும். எனவே பெண் பிள்ளைகளுக்கு லெக்கின்ஸ், நகை, செல்போன் வாங்கி தருவதோடு, தடகளப் போட்டி, நீச்சல், போன்ற விளையாட்டுகளையும் கற்றுத்தாருங்கள். இது உடல் வலுபெற உதவும். தற்காப்பு கலைகளையும் கற்று கொடுக்க மறவாதீர்கள். அதுதான் யுக்தி. சமயோசித புத்தியும் உடல்வலிமையும் இணைந்தே எந்த ஒரு மோசமான சூழலையும் எதிர்த்து போராடி தப்பிக்க உதவும்.

மேலும் பெண் மனவலிமை பெற வீட்டில் அவளுக்கு சக மரியாதை கொடுங்கள். தானும் மதிக்கத்தக்கவள் என்ற எண்ணம் தாழ்வு மனப்பான்மையை போக்கும். தன்னை பலவீனத்தின் சின்னமாக நினைக்கும் பெண்கள் வெற்றிபெறுவதே இல்லை. உடல் வலிமை, மன வலிமை, யுக்தி இது மூன்றும் உள்ள பெண் எந்த ஒரு கெட்ட எண்ணம் கொண்ட ஆண் மிருகத்தையும் உதைத்தெறிவாள்.

ஆண்களின் வக்கிர எண்ணத்தை நீக்குவது எப்படி ?

ஆணின் மனதில் வக்கிர எண்ணங்கள் எழுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. உடலுறவு என்பது இனப்பெருக்கத்தின் ஒரு படி என்பதை யாரும் குழந்தை பருவத்தே சொல்லிக்கொடுப்பது இல்லை. பெற்றோருக்கே இந்த விசயத்தில் விழிப்புணர்வு தேவை. எதிர் பாலின ஈர்ப்பு, மரபிலேயே ஊரிய ஒன்றுதான். அதாவது உயிரினங்கள் அனைத்தும் இயல்பிலேயே சோம்பேறித்தனம் கொண்டவை என்பதால், மிக முக்கியமான செயல்களை நம் உடலே அதன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளும். செரிமானம், இதயத்துடிப்பு, கல்லீரல், மண்ணீரல், நுரையீரல், சிறுநீரகம் போன்ற பெரும்பாலான உடலியக்கங்களை நமது உடலே கவனித்துக் கொள்ளும். சுவாசம், கண்ணிமைத்தல் போன்ற சில இயக்கங்களை நாம் விருப்பப் பட்டால் ஒரு குறிப்பிட்ட நிலை வரை கட்டுப்படுத்த முடியும். அப்படி நம்மால் ஒரு குறிப்பிட்ட நிலை வரை காம உணர்வுகளையும் கட்டுபடுத்த முடியும். மற்றபடி இனப்பெருக்கம் என்பது நம் மரபியல் ஞாபகம் (genetical memory) ஆகும். தன் இனம் அழியாமல் இருக்க இந்த காம உணர்வுகள் நம் அனுமதி இருந்தாலும் இல்லையென்றாலும் சுயத்தையும் மீறியாவது வெளிப்படும்.

எனவே, என் பையன் பொண்ணுங்கள ஏறெடுத்து கூட பார்க்க மாட்டான் என்பது நிஜமல்ல. அப்படி நிஜம் என்றால் அவனை டாக்டரிடம் கூட்டிச் செல்வது நலம்.

உளவியல் ரீதியாக எதிர்பாலின ஈர்ப்பை கையாள பலருக்கும் தெரிவதில்லை.

உயிரினங்களின் இருப்பு

இனப்பெருக்கம் என்பது முழுவதும் நம் கட்டுப்பாட்டில் இருந்திருந்தால் நம் இனம் என்றோ அழிந்திருக்கும். அந்த இனப்பெருக்கத்தின் ஒரு பகுதியான பிரசவத்தில் உயிர் போகும் வலி இருப்பதால், உயிரினங்கள் அவற்றை வெறுத்து ஒதுக்கிவிடாதிருக்கவே, அதனை சமன் செய்ய அல்லது ஈடுகட்ட மற்றொரு பகுதியான ஊடலில் இன்பம் என்பது இணைக்கப் பட்டுள்ளது. இப்படி அமைத்தது யார் என்று கேட்டால், பரிணாம வளர்ச்சியின் ஞானம் என்பேன் நான். உங்களின் நம்பிக்கை கடவுளின் செயலென்றால் வாதிட மாட்டேன். யாராக அல்லது எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். உயிரினங்களின் இருப்பை உறுதிப்படுத்தவே இத்தகைய வழிமுறைகள்.

அதிலும் மெய்சிலிர்க்க வைக்கும் விதமாக, எதிர் பாலின ஈர்ப்பு இருபாலினத்தவருக்கும் இருந்தாலும், இருபாலினத்தவரும் கட்டுப்பாடோது இருந்தால் இனம் பெருகாது. அதனால், வலியின்றி சுகம் மட்டும் பெறும் ஆணுக்கு உணர்வுகளை கட்டுப்படுத்துவதில் குறைந்த திறனையும், உடல்ரீதியாக மாற்றத்தையும் பிரசவ வலியையும் அனுபவிக்கும் பெண்ணுக்கு உணர்வுகளை கட்டுப்படுத்துவதில் அதிக திறனையும் அமைத்ததெல்லாம் படைப்பின் உச்சம். இது மனிதர்களுக்கு மட்டுமல்ல எல்லா உயிர்களுக்கும் பொருந்தும். எனவேதான் ஆண்களே பெரும்பாலும் கற்பழிக்கிறார்கள்.

முறையாக கற்பித்தல்

நாம் மனிதர்களாக பரிணாம வளர்ச்சி அடைந்து நாகரிகங்கள் பல கடந்தபிறகு இந்த இருபத்தி ஓராம் நூற்றாண்டில் உடலுறவு / Sex என்பது பேசத்தகாத வார்த்தையைப் போன்று திரித்து வைத்திருப்பதுவே முதல் சூழ்ச்சி. உங்கள் குழந்தைகளுக்கு நீங்களே இனப்பெருக்கத்தை பற்றி கற்றுக்கொடுப்பதுவே நல்லது. “இதெல்லாம் நான் எப்புடி சொல்வேன் ? இந்த வயசுலையே இதபத்தி தெரிஞ்சிகிட்டா தப்பா போயிருவான்/ள். ” என்று நினைப்பீர்களானால், டி.வி, சினிமா, டீக்கடை போஸ்டர், வார இதழ்களின் முகப்பு, நடுபக்கம் என எல்லாமே அவர்களைச்சுற்றிலும் காமத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கும். தவறான வழியில் அவனை இட்டுச் செல்லும். Porn videos குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் இல்லை என்பதை மறவாதீர்கள். நண்பர்கள் மூலமோ மொபைல் மூலமோ காமம் குறித்த தவறான கருத்துக்களை மனதில் ஏற்றிக் கொள்வர். பிறகு எல்லாமே சிக்கல்கள்தான்.

உங்கள் குழந்தைகளிடம், இனப்பெருக்கத்தின் முக்கியத்துவத்தை சொல்லி அதில் பருவமடைதல், உடலுறவு கொள்ளுதல், கருவுறுதல், கற்பகாலம், பிரசவம் என்ற நிலைகள் இருப்பதையும், அப்படி ஆணும் பெண்ணும் சேரும் நிகழ்வை சுற்றத்தார் அனைவரும் கொண்டாடுவதே திருமணம் என்றும், எதிர்பாலின ஈர்ப்பு தவறல்ல, அதை சரியான வயதில் ஒழுக்கத்துடன் வெளிப்படுத்துவதே நாகரிகம் என்றும், தகாத உறவுகள் ஆபத்தானவை என்பதையும் சொல்லிக் கொடுங்கள். வெறுமனே good touch bad touch மட்டும் சொல்லிக் கொடுத்தால் போதாது.

இணையத்தில் இருக்கும் porn videos ஐ முடக்குவதோ, தடை செய்வதோ தற்போதுள்ள நிலையை இன்னும் மோசமாக்கும். எதிர்பாலினத்தின் உடலமைப்பை மறைத்து வைக்க வைக்க அதைப் பார்க்கவே ஆர்வம் அதிகரிக்கும். மிக எளிமையாக இனப்பெருக்கத்தை குழந்தை பருவத்தே அறிமுகப் படுத்துவது பல தவறுகளை தவிர்க்க உதவும்.

இத்தனை புரிதல்களோடு சமூகத்தில் கலக்கும் குழந்தைகள் ஒருபோதும் பாலியல் தொந்தரவுகளை ஏற்படுத்த மாட்டார்கள். அவற்றிற்கு பலியும் ஆக மாட்டார்கள். தன் உணர்வுகளை ஹார்மோன்களின் வெளிப்பாடு என்று புரிந்து கொள்வார்கள்.

காதல் ?

காம உணர்வுகளுக்கு, எதிர் பாலின ஈர்ப்புக்கு காதல் என பெயர்சூட்டுவது புனிதப்படுத்துவது எல்லாம் கவிஞர்கள் செய்த சுயநலம். தன் மொழித்திறனை வெளிப்படுத்த காதலுக்கான வரையறையை அவரவர் விருப்பத்திற்கு அமைத்து விட்டார்கள். எதிர் பாலின ஈர்ப்பு, உடலுறவு, இல்வாழ்க்கையில் உள்ள அப்பட்டமான உண்மைகளை விளக்க சொற்ப கவிஞர்களுக்கே அறிவிருந்திருக்கிறது.

அப்புறம் காதல்னா என்ன? என்று கேட்காதீர்கள். நானும் எனக்கு ஏற்றாற்போல் என் சவுகரியத்துக்கு ஒரு விளக்கத்தை கொடுத்து உங்கள் மனதை குழப்ப விரும்பவில்லை. உற்ற துணையோடு வாழ்ந்து பாருங்கள், காதலுக்கான விளக்கம் அர்த்தம் எல்லாம் தன்னால் புரியும்.

சினிமாவில் வரும் டூயட் பாடல்களைக் கண்டு ஆசைப்பட்டு நீங்களும் பீச்சு பார்க்கு தியேட்டர் ஹோட்டல் என்று ஜோடியாக சென்றிருப்பீர்கள். யதார்த்தத்தில் அவ்வளவு கவித்துவமாகவும் காதல் ததும்பவும் உங்களின் பயணம் இருந்திருக்காது. ஏனென்றால் நிஜத்தில் பொருளாதாரம் என்ற வில்லன் எல்லா இடங்களிலும் இருப்பான். குப்பை என்ற காமெடியன் எங்கு திரும்பினும் கிடப்பான். படத்தில் பரவசமூட்ட காதலுக்காக எந்த எல்லையையும் ஹீரோ தாண்டுவார். சினிமா சண்டைகள் எப்படி நிஜத்தில் சாத்தியமில்லையோ, சினிமா காதல்களும் அப்படி நிஜத்தில் சாத்தியமில்லை. அதற்காக காதல் கேவலமானது என்று சொல்லவில்லை. காதல் இயற்கையானது. காதலை அழகுபடுத்த முயற்சிப்பது அதனை மேலும் கொச்சைப்படுத்துவதாகும். எதிர் பாலின ஈர்ப்பை (காதலை) உள்ளவாறே ஏற்றுக்கொள்ளுங்கள். அதைவிடவும் இல்வாழ்க்கையில் பேரின்பம் வேறேதும் கிடையாது.

அழகு ?

வெள்ளைத்தோல் நடிகைகளை கழிவறைக் கற்பனைகளில் கற்பழிக்கும் ஆண்களுக்கு நிஜத்தில் ஒரு வாய்ப்பு கிடைத்தால் தவறவிடுவார்களா ? ஒரு பெண்ணின் வாழ்வை சூறையாடி விடுவார்கள்.

நிறத்திற்கும் அழகிற்கும் வாழ்விற்கும் தொடர்பில்லை என்று உணர்வதும் சுற்றத்தாருக்கு உணர்த்துவதும் பகுத்தறிவு கொண்டவர்களின் கடமையாக கருதுகிறேன். நம்பவில்லை என்றால் அவரவர் பெற்றோர்களைக் கண்டாவது புரிந்து கொள்ளுங்கள். அவர்களின் நிறம் அழகு அன்பு எதற்கும் சம்பந்தம் இருக்காது. அழகு நிறம் தோற்றம் எல்லாம் வியாபாரத்திற்குதான் தேவை, வாழ்க்கைக்கு இல்லை.

ஆதி மனிதன் பகல் நேரத்தில் (வெளிச்சம்-வெள்ளை) பாதுகாப்பாகவும் இரவு நேரத்தில் (கருப்பு-இருள்) பயமாகவும் உணர்ந்ததின் பரிணாம வளர்ச்சியே வெள்ளையின் மீதான நம்பிக்கையும் கருப்பின் மீதான அவநம்பிக்கையும். இந்த உளவியல் உண்மையின் அடிப்படையில்தான், வெள்ளையர்கள் நம்மைவிட மேம்பட்டவர்கள் என நம்பினோம். அவர்களின் வாழ்க்கை முறையை கண்டு ஆசைப்பட்டோம், ஏமாந்தோம், ஏமாறுகிறோம். இப்போதும் அது தொடர்வதற்கு சாட்சி, வெள்ளை தேகத்துடன் பெண்கள் நடிக்கும் விளம்பரங்களும், சினிமாக்களும்தான். பெண்மை மீதான ஈர்ப்பும் வெண்ணிறத்தின் மீதான நம்பிக்கையும் இணைந்துதான் பல சமயங்களில் நகைகடை திறப்புவிழாவிற்கு வரும் நடிகைகளால் நகரமே ஸ்தம்பித்து விடுகிறது‌.

மேலும் அழகு என்பதற்கு வெள்ளைதான் அர்த்தம் என்று நம் மூளையை கழுவி வைத்திருக்கிறார்கள். பேர் அன்ட் லவ்லி, பவுடர் டப்பா இல்லாத வீடுகளே இல்லை அல்லவா. அப்படியானால் கருப்புதான் அழகா என்றால் அதுவும் இல்லை. உலகில் அழகு என்ற சொல்லுக்கு வரையறையே கிடையாது. ஏனென்றால் ஒருவரை அழகு என்று நாம் எண்ணுவதற்கு காரணம் நம் மூளையில் உள்ள அமிக்டலா என்ற இடம்தான். அங்குதான் அழகு குறித்த நிபந்தனைகள் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும். அதாவது முதலில் அவரவர் அம்மாவின் முகவமைப்பு அங்கு நம்பிக்கைக் உரியவர்களாக பதிவாகும். ஆதுவே அழகு என்றும் வரையறை நிர்ணயமாகும். பிறகு வளர வளர தன் சுற்றம் மதிப்பிடும் அழகை அங்கு பதிவேற்றிக் கொள்ளும்.

பெண்களின் மார்பை கவர்ச்சிப் பொருளாக்கிய பெருமை ஊடகத் துறையையே சாரும். பெண்களை சதைப் பிண்டமாய் காட்டுவது மட்டுமே ஆதாயம் தரும் என்பதே பல பத்திரிக்கைகளின் தார்மீக மந்திரம். லாபம் வந்து என்ன செய்வது ? தத்தம் பிள்ளைகள் வீதியில் பாதுகாப்பாய் நடக்கக் கூட முடியாத சமூகத்தை உருவாக்கிவிட்டு, வங்கிக் கணக்கு புத்தகங்களில் சேமிப்புத் தொகையை திரும்பத் திரும்பப் பார்த்து பாதுகாப்பாய் உணர்வது அடிமுட்டாள்தனமே. என்றுதான் பத்திரிகை முதலாளிகளுக்கு இது புரியப்போகிறதோ. சிலரது லாபத்திற்காக ஊடகம் செய்யும் இந்த சீரழிப்பை சமூகத்தில் இருந்துதான் பிரதிபலிக்கிறோம் என்று சப்பை கட்டு கட்டுவார்கள்.

ஊரு ஒலகத்துல நடக்காததையா நாங்க பேப்பர்ல/ டிவில/ சினிமாவுல காட்டுறோம் ?

என்று கேட்பார்கள். ஓரிடத்தில் நடந்ததை தண்டோரா அடித்து லட்சக்கணக்கானோரின் அறிவுக்கு கொண்டு சென்று அதில் ஏதாவது ஓரிரண்டு லூசுகள் பின்பற்றிவிட்டால் அவர்களை சமூகத்தின் பிரதிநிதிகளாக சித்தரித்து இந்த சமூகமே இப்படித்தான் என நம்மையே நம்ப வைப்பார்கள்.

மறுபுறம், அழுக்குகளில் ஆதாயம் தேடும் இந்த அற்ப பிறவிகளின் வலையில் இருந்து பெண்கள் சமூகத்தை மீட்டெடுப்பது சற்று கடினம். பத்திரிகை தர்மம் மீறும் இவர்களின் உரிமத்தை அரசாங்கம் ரத்து செய்ய வேண்டும். அயிட்டம் சாங் இல்லாத சினிமா, டூ பீஸ் நடிகை படம் இல்லாத வார இதழ், கள்ளக்காதல் செய்திகள் இல்லாத நாளிதழ், என எப்போது திருந்துகிறார்களோ அப்போதுதான் பெண்ணை கவர்ச்சிப் பொருளாக பார்ப்பது குறையும்.

Make-up எல்லை உண்டு

பெண்களுக்கும் ஆடை உடுத்துவதில் சற்று அதிக கவனம் தேவை. அழகான தோற்றம் அத்தியாவசிய தேவை ஆகிவிட்டது என்றாலும், மனித மிருகங்கள் எங்கு எந்த உருவத்தில் இருக்கும் என்று தெரியாதல்லவா, எனவே சமூகம் காமம்குறித்த பகுத்தறிவு பெரும் வரை உடலை மார்பை தொடைகளை அப்பட்டமாக காட்டும் உடைகளை தவிர்த்திடுங்கள். முக்கியமாக லெக்கின்ஸ். Modern culture என்று நினைத்துக் கொண்டு உள்ளூரில் டீசர்ட்டுடன் திரிவீர்கள் என்றால் பல ஆண்களுக்கு பார்க்கத் தூண்டும், சில ஆண்களுக்கு தீண்டத் தூண்டும். வெறி கொண்டு விரட்டும் ஆண்மிருகத்திடம் பெண்ணியம் பேச எல்லாம் நேரமிருக்காது. வெளிநாடுகளில் பெண்களின் உடல்குறித்த தெளிவு எல்லா ஆண்களுக்கும் இருக்கும். நம்மூரில் அப்படி இல்லை. ஏ படங்களின் போஸ்டரையே ஏக்கமாக பார்க்கும் ஆண்களே அதிகம். இந்த நிலை மாறும் வரை உடை குறித்த கவனம் பெண்களுக்கு தற்காத்துக் கொள்ள உதவும்.

மேக்கப் போடும் போது இரவு நேர பொது இடங்களில் ஆண்களை கவர நிற்கும் விலை மாதர்கள் அளவிலான பூச்சுகளை உதட்டுச் சாயங்களை தவிர்ப்பது உத்தமம்.

உடனே ஆண்மகன்கள் “அப்புடி சொல்லுங்க பாஸு ” என்று மனதுக்குள் ஆறுதலடைவது தெரிகிறது. உங்களுக்கும் பெண்களை ரசிக்க பாடம் எடுக்க வேண்டும்.

பெண்ணை ரசிப்பதற்கும் வக்கிர எண்ணத்தோடு பார்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. அவளுக்கு உறுத்தாத வரை அவளது வெளிப்புற அழகை (முகம் மற்றும் உடல் வடிவம்) தள்ளி நின்று தீண்டாமல் ரசிக்கலாம். மேலும் ஆணின் பார்வை பெண்ணிற்கு உறுத்தலை ஏற்படுத்துவதற்கு முன்பான நிலைதான் ரசிப்பதற்கான எல்லை. அத்துடன் நாம் ரசிப்பதற்கான அனுமதி முடிகிறது. பின்தொடர்வதோ, வைத்த கண் வாங்காமல் பார்ப்பதோ, பயமுறுத்துவதாகும். இவை பெண்களுக்கு ஆண்கள் மீதான வெறுப்பையே அதிகரிக்கும்.

பெண்கள் உளவியல்

பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்குவது மட்டும் பெண்களுக்கு எதிரான அத்துமீறல் இல்லை. அவளின் வாழ்வை வடிவமைக்கும் முக்கியமான முடிவுகளையும் ஆண்களே எடுப்பது (என்ன படிக்க வேண்டும், எப்போது யாரை திருமணம் செய்து கொள்ள வேண்டும், எப்போது குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும், என்ன வேலை செய்ய வேண்டும் போன்ற முக்கியமான முடிவுகள்), பொருளாதார ரீதியாக அவளின் சுதந்திரத்தை பறிப்பது, சமூக தொடர்புகளை தடுப்பது, கண்ணத்தில் அறைவது உட்பட அதட்டும் அடக்குமுறைகள், வீட்டிலேயே அடைப்பது, என அவளின் உரிமைகளை சுதந்திரத்தை பறிக்கும் எல்லாமும் வன்கொடுமைகள்தான்.

இந்த ஈர வெங்காயமெல்லா எங்களுக்கு தெரியும், அவ வேலைக்கு போயி ஒன்னும் குடும்பத்த காப்பாத்த வேணாம், பெண்புத்தி பின்புத்தி, பொண்ணுங்கள எல்லாம் வைக்குற எடத்துல வைக்கனும், போன்ற பெண்களுக்கு எதிரான கருத்துக்கள் எல்லாவற்றிற்கும் ஒரே பதில்தான். அவளையும் சமூகத்தில் ஒரு அங்கமாக அங்கீகாரம் கொடுங்கள், பொறுப்புகளை கொடுங்கள், பிறகு பாருங்கள், சீரியலில் வரும் கதாபாத்திரங்கள் போல இல்லாத அர்த்தங்களை கண்டுபிடிக்க அவளுக்கு நேரமில்லாமல் போகும். பெண்கள் மட்டுமல்ல எந்த ஒரு ஆணையும் பெண்களின் உலகிற்கான இருபத்தி நான்கு மணி நேர வேலைகளை பணித்தால், அவனும் அவ்வாறே நடந்து கொள்வான். பிரச்சினை ஆணா பெண்ணா என்பதில் இல்லை. எந்த சூழலுக்கு ஆளாக்கப்படுகிறோம் என்பதில்தான் இருக்கிறது.

ஆண் பெண் உறவுகளில் இருக்கும் சிக்கல்களை அவிழ்க்க தன்னார்வலர்கள், பகுத்தறிவாளர்கள், முற்போக்கு எழுத்தாளர்கள் போன்றவர்கள் எந்த அளவுக்கு முயற்சிக்கிறார்களோ, அதைவிட அதிகமாகன சிக்கல்களை ஊடகங்களும், சமூகமும், அதை விளைத்த குடும்பமும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. ஆணும் பெண்ணும் சமம் என்று நான் சொல்லவில்லை. இருவரும் அவரவர் வழியில் சிறந்தவர்கள். அதேசமயம், ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை உண்டு என்பதை நாம் உணர வேண்டும்.

பெண்ணை புரிந்து கொள்ளவே முடியாது. பொண்ணுங்க மனசு ஆழம் நீளம் என்று அளப்பதை முதலில் நிறுத்திவிடுங்கள். அவளை புரிந்து கொள்வது மிக சுலபம். கீழே உள்ள வாசகத்தை நன்கு மனதில் பதிந்து கொள்ளுங்கள்.

Whatever you give a woman, she is going to multiply. If you give her sperm, she’ll give you a baby. if you give her a house, she will give you a home. If you give her groceries, she’ll give you a meal. If you give her a smile, she’ll give you her heart. She multiplies and enlarges what is given to her. So, if you give her any crap, you will receive a ton of shit.

நீங்கள் பெண்ணிடம் என்ன கொடுக்கிறீர்களோ அதையே அவள் பல்கிப் பெருக்கி தருவாள்.

முரண்

பெண்களை ஒரு பக்கம் ஊடகம் வர்ணித்து தள்ளியும், இன்னொரு பக்கம் சமூகம் வசைபாட பெண்களது பிறப்புறுப்பை பயன்படுத்தியும் அடுத்த தலைமுறையை வளர்க்கிறது. இந்த முரணின் அர்த்தம்தான் என்ன ? திருமணம் ஆகும்வரை உள்ள காதலை கவித்துவமாகவும் திருமணத்திற்கு பிறகு பெண்கள் ஒரு தொல்லை எனவும் இளைஞர்கள் மனதில் ஊடகங்கள் புகுட்டுவதின் விளைவுகள் என்ன ? பெண்ணின் உடலைப் பார்த்த பின்பு ஆன்களுக்கு பெண்கள் மீது உள்ள மோகம் தீர்ந்து விடுகிறது என்பதா ? இந்த முரண்களை ஆராய்ந்தால் ஒரு உண்மை புரியும். பெண்கள் எவரும் அழகானவர்கள் அல்ல. அனைவருமே இயல்பானவர்கள். அவர்களை அழகாக்குவது திருமனத்திற்கு பின் உள்ள அன்பான வாழ்க்கைதான்.

உணவு

உணவுப் பழக்கத்திற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று சிந்திக்காதீர்கள். நிறையவே தொடர்பிருக்கிறது. இன்றைய இளைஞர்களின் உணவுப் பழக்கத்தை கவனியுங்கள். பரோட்டா, சிக்கன் ரைஸ், ப்ரைட் ரைஸ், நூடுல்ஸ், மற்றும் பிராய்லர் கோழியை அதிகம் உட்கொள்கிறார்கள். இவை அனைத்தும் மூளையின் வளர்ச்சியில் சிறிதும் உதவாதவை. மேலும் பக்கவிளைவுகளாக ஹார்மோன்கள் சீரற்று சுரக்கும் அபாயமும் இருக்கிறது‌. உடல் சோர்வு, சோம்பேறித்தனம் என எல்லாம் இலவசங்கள். இப்படி சோம்பேறித்தனங்களின் மொத்த உருவமாய் இருக்கும் ஒரு இளைஞனை பரவசப்படுத்தும் ஒரே விஷயம் காமம். தனிமையில் காமக் கற்பனைகளை கட்டவிழ்த்துவிட்டு இன்புற்று போலியான திருப்தி அடைகிறார்கள். மோசமான சூழ்நிலையில் எதிர்நிற்கும் பெண்ணின் உடலை வெறும் இச்சையை தனிக்கும் பொருளாகவே பார்க்கிறான். இப்படி மந்தை போன்ற இளைஞர் சமுதாயம் உருவாக உணவு முறைகளும் முக்கிய காரணம்.

சிறுதானியங்கள் காய்கறிகள் பழவகைகள் என்று மூளையின் வளர்ச்சிக்கு தேவையான fatty acids, omega acids, போன்ற அத்தியாவசிய மூலக்கூறுகள் கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்ளவதே இதற்கு தீர்வாக அமையும்.

தண்டனைகள்

மேற்கூறிய அனைத்து புரிதல்கள் இருந்தாலும், மிருகத்திலிருந்து மனிதன் முழுவதுமாக பரிணாம வளர்ச்சி அடையவில்லை என்பதற்கு உதாரணமாக தினமும் கற்பழிப்பு செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. குற்றம் நொடியில் நிகழ்ந்திட அதற்கான நீதி, தண்டனை என எல்லாமும் பேசி பேசி இழுத்து அடுத்த குற்றமே நிகழ்ந்து மக்களின் கவனம் திசைதிருப்பப்பட்டுவிடும். இதற்கு ஒரே தீர்வு குற்றம் புரிவோருக்கு தண்டனை குறித்த பயத்தை ஏற்படுத்துவதே. குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒரு ரேபிஸ்ட் தண்டனைக்கு உள்ளாக்குவதை நேரலையில் ஒளிபரப்ப வேண்டும். நான்கு சுவற்றுக்குள் தூக்கிலிடுவது முடிந்த குற்றத்திற்கான தண்டனை மட்டுமே. அதை ஒளி பரப்புவது நடக்கவிருக்கும் குற்றத்திற்கான எச்சரிக்கையாக இருக்கும்.

இதுபோக ஏகப்பட்ட காரணங்களுக்காக பெண்கள் கற்பழிக்கப் படுகிறார்கள். இவற்றில் சாதி, மதம், பழியுணர்வு, காதல் என எதை எதையோ உள்நுழைத்து வதை செய்கிறார்கள். அம்மிருகங்களை சமூகத்தில் இருந்து நீக்குவதே சமூகத்திற்கு நலம்.

மேலும் தங்களின் பொன்னான நேரத்தை ஒதுக்கி படித்தமைக்கு நன்றி எதுவும் கிடையாது. இவற்றை தீர ஆராய்ந்து நல்ல முறையில் செயல்படுத்துங்கள் சிலையே வைக்கிறேன்.

Image result for comment please

பின்னூட்ட தவறேல். உரையாடி அறியாமை களை.

Surya devan V — 30.04.2018