Daily Archives: April 10, 2018

போதை

சரக்கு தம்மு கஞ்சா மட்டும் போதை பொருட்கள் இல்ல…

உன் அத்தியாவசிய பிரச்சனைய, உரிமைய மறக்கடிச்சு, உன் உழைப்ப, ரத்தத்த உறிஞ்சும் எதுவும் போதைப் பொருட்கள்தான்.

Related image

அது கிரிக்கெட்டோ, டிவி நிகழ்ச்சியோ, பேஸ்புக்கோ, வாட்ஸப்போ, யூடியூபோ, கிக் ஏத்தி உன் நேரத்த அதுக்காக செலவிட வைக்குற எல்லமே போதைப் பொருள்தான்.

மறவாதே உன் வாழ்வை.
தவறாதே உன் வழியை.
போதைப் பழக்கம் உன் வாழ்வில் முன்னேற்றத்தைத் தடுக்கும்.

Suryadevan Vasu
09.04.2018

தற்கொலை

தனிமை படுத்திக் கொள்வது தற்கொலைக்கு சமமானது‌.

Image result for suicide

தன்ன தன் ஜாதிப் பெயர வச்சி ஒருத்தன் அடையாளப் படுத்திக்கிறான். அவன் ஜாதிக்காரன் பத்து பேர் அத பாத்து பெரும படுவான். பிற ஜாதிக்காரன் நூறு பேரு அத பாத்து வேறு படுவான். இவன் நம் ஜாதி இல்லையென்று‌.

சும்மா இருந்த ஒருத்தன் தன் ஜாதிப் பேர பொது வெளியில் பயன்படுத்த ஆரமிச்சா அது அவன அந்த மக்களிடத்தில் இருந்து பிரித்து நானும் நீயும் ஒன்றல்ல, நான் வேறு நீ வேறு என்ற வேற்றுமையையே விதைக்கிறது.

நாம் என்பதில் இல்லாத பெருமை, நான் இந்த சமூகத்தை சேர்ந்தவன் என்று பறை சாற்றுவதில் வந்து விடுமா ?

சுயலாபத்திற்காக கெத்திற்காக எந்த ஜாதியையும் ப்ரான்டிங் மார்கெட்டிங் செய்யாதீர்கள். எல்லாம் வீன். பிரித்தாளும் யுக்தியின் ஒரு படிநிலைதான் ஜாதி.

மாடு மாதிரி பிரிந்து பலியாகாமல் புறாக்கள் போன்று ஒன்றுபட்டு தப்பிப்பிழையுங்கள்.

பொது நலம் கருதி வெளியிடுவோர், இல்லுமினாட்டியின் எனிமி
– Suryadevan Vasu
19.03.2018

எது நம் பெருமைமிகு அடையாளம்?

எது என் (அ) நம் பெருமைக்குரிய அடையாளம்?

Image result for identity

தமிழ் நம் அடையாளம்னு பிதற்றகூடாது. உண்மையில் தமிழை ஓரளவிற்காவது கற்றரிந்தவர் அதன் சிறப்புகளை பயின்று வியந்தவர்கள் அப்படி சொல்லிக்கொள்ளலாம். தமிழில் பிழையின்றி எழுதிப்படிக்கக்கூட தெரியாதவர்கள் தமிழ் என் அடையாளம் என்பதை அறியாமையின் உச்சம் என்றே நினைக்கிறேன்.

சரி வேறு எது நம் அடையாளம் ? நம் பெருமை ?

நாம் பிறந்த மதமா ?
நாம் பிறந்த ஜாதியா ?

மதம் ஜாதி இரண்டிலும் நமக்கு எந்த பங்கும் இல்லை. நம் பெற்றோர் அந்த சமூகத்தை சார்ந்தவரென்பதால் நாமும் அச்சமூகத்தை சேர்தவராகிறோம். அதிலென்ன சாதித்துவிட்ட பெருமை? நிகழ்தகவில் பலித்துவிட்ட வாய்ப்புதான் நம் பிறப்பென்பது.

நாம் படித்த படிப்பா ? இல்லை. நாம் படித்ததை நம் நலனுக்காக மட்டுமே பயன்படுத்தும் வரை அதில் பெருமை கொள்ள ஒன்றும் இல்லை.
(வேறெப்படி பயன்படுத்துவது என்று வினவுவர்களுக்கு தர்சார்பு பொருளாதாரம், விழிப்புணர்வு பற்றிய பதிவுகள் பின்னர் வரும்)

ஊர சொல்லி பெருமைபட்டுக் கொள்ளவும் ஒரு கூட்டம் இருக்கு. ஊருல என்னடா பெருமனு கேட்டா நாலு பெரியவங்க பேர சொல்லி அவரு பொறந்த ஊருங்குறான். ஏலே அவரு சொன்ன எதையாவது நீ பாலோ பண்ணியாலன்னு கேட்டா சத்தமில்லாம போயிருவான்.

இன்னும் சிலர் ப்ரவுட் டு பி இந்தியன் லாம் சொல்லுறாங்க. சிரிப்புதான் வருது.

ஆம்பள சிங்கம் னு ஒருபக்கம் அலையுறாங்க. பரிதாபமா இருக்கு.

என்னைய கேட்டா, ஆறறிவு மனிதனா பிறந்ததும், ஒரளவிற்காவது என்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை அறிவியல் அடிப்படையில் புரிந்து கொள்வதும், மனித மாண்புடன் சக மனிதனை மனிதனாக பார்க்கவும், என்னுள் இருக்கும் அறியாமையை நீக்கி பிறரின் அறியாமையையும் நீக்க உதவும் பகுத்தறிவையுமே என் பெருமைமிகு அடையாளமாக சுட்டிக்காட்டுவேன்.

13.03.2018