எது நம் பெருமைமிகு அடையாளம்?

எது என் (அ) நம் பெருமைக்குரிய அடையாளம்?

Image result for identity

தமிழ் நம் அடையாளம்னு பிதற்றகூடாது. உண்மையில் தமிழை ஓரளவிற்காவது கற்றரிந்தவர் அதன் சிறப்புகளை பயின்று வியந்தவர்கள் அப்படி சொல்லிக்கொள்ளலாம். தமிழில் பிழையின்றி எழுதிப்படிக்கக்கூட தெரியாதவர்கள் தமிழ் என் அடையாளம் என்பதை அறியாமையின் உச்சம் என்றே நினைக்கிறேன்.

சரி வேறு எது நம் அடையாளம் ? நம் பெருமை ?

நாம் பிறந்த மதமா ?
நாம் பிறந்த ஜாதியா ?

மதம் ஜாதி இரண்டிலும் நமக்கு எந்த பங்கும் இல்லை. நம் பெற்றோர் அந்த சமூகத்தை சார்ந்தவரென்பதால் நாமும் அச்சமூகத்தை சேர்தவராகிறோம். அதிலென்ன சாதித்துவிட்ட பெருமை? நிகழ்தகவில் பலித்துவிட்ட வாய்ப்புதான் நம் பிறப்பென்பது.

நாம் படித்த படிப்பா ? இல்லை. நாம் படித்ததை நம் நலனுக்காக மட்டுமே பயன்படுத்தும் வரை அதில் பெருமை கொள்ள ஒன்றும் இல்லை.
(வேறெப்படி பயன்படுத்துவது என்று வினவுவர்களுக்கு தர்சார்பு பொருளாதாரம், விழிப்புணர்வு பற்றிய பதிவுகள் பின்னர் வரும்)

ஊர சொல்லி பெருமைபட்டுக் கொள்ளவும் ஒரு கூட்டம் இருக்கு. ஊருல என்னடா பெருமனு கேட்டா நாலு பெரியவங்க பேர சொல்லி அவரு பொறந்த ஊருங்குறான். ஏலே அவரு சொன்ன எதையாவது நீ பாலோ பண்ணியாலன்னு கேட்டா சத்தமில்லாம போயிருவான்.

இன்னும் சிலர் ப்ரவுட் டு பி இந்தியன் லாம் சொல்லுறாங்க. சிரிப்புதான் வருது.

ஆம்பள சிங்கம் னு ஒருபக்கம் அலையுறாங்க. பரிதாபமா இருக்கு.

என்னைய கேட்டா, ஆறறிவு மனிதனா பிறந்ததும், ஒரளவிற்காவது என்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை அறிவியல் அடிப்படையில் புரிந்து கொள்வதும், மனித மாண்புடன் சக மனிதனை மனிதனாக பார்க்கவும், என்னுள் இருக்கும் அறியாமையை நீக்கி பிறரின் அறியாமையையும் நீக்க உதவும் பகுத்தறிவையுமே என் பெருமைமிகு அடையாளமாக சுட்டிக்காட்டுவேன்.

13.03.2018

Leave a Comment